.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, March 24, 2016

தேர்தல்




தேர்தல் வந்தால் போதும் !
   தெருவிலே வெண்மைக் கோலம் !
மாறுதல் தருவோம் என்று...
    வாயிலே வார்த்தை ஜாலம் !

கறைபடி கையோர் எல்லாம்...
    கறைபோட்ட வேட்டி தன்னை..
அரையிலே அணிந்தே வருவார் !
   அள்ளியே வாக்கும் தருவார் !

டீக்கடை கூட்டம் அள்ளும் !
   'டாக்' கடை எனவே மாறும் !
பூக்கடை, காலை மாலை...
   முப்போது மாலை விற்கும் !

தலைவர்கள் கொடுக்கும் பேட்டி..
  பதியவே நிருபர் போட்டி...!
அலையென கட்-அவுட் போஸ்டர்..
   தெருச்சுவர் சேலை மாட்டி !

கத்தையாய் கரன்சி புரளும் !
   காவல்ர் கண்டால் அலறும் !
வித்தையாய் காட்சிகள் மாறும் !
   தினமொரு நிலையென ஆகும் !

நோட்டுகள் வாங்கிக் கொண்டு
   நமக்குஏன் கவலை என்றே
ஓட்டுகள் அளிப்பது தவறு !
    உணர்ந்திடு அருமை நண்பா !

வாக்கினை செயலாய் மாற்றும்
   வீரனைக் கண்டே உந்தன்...
வாக்கினை பதிவே செய்வாய்...!
   நாட்டையும் காத்திடச் செய்வாய் !





Friday, March 4, 2016

ஜோக்ஸ் - பாகம் - 19


​ஆட்சிக்கு வந்தால்...

"​பிரச்சார கூட்டத்துக்கு முன்னாடி தலைவருக்கு வயிறு முட்ட ப்ரியாணி போடதீங்கன்னு சொன்னேனே...கேட்டீங்களா?"​
"ஏன்? என்னாச்சு?"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...ன்னு தலைவர் பேசத் தொடங்கினவுடனே...பெரிசா "பே...."ன்னு ஏப்பம் விட்டுட்டாரு.......!"

=============================================================================

இக்கட சூடு...!

"தேர்தல் பிரச்சார கூட்டத்தில ஏன் கையில நெருப்பு சட்டியைத் தூக்கிக்கிட்டு இருக்காங்க?"

"அனல் பறக்கும் பிரச்சாரமாம் !"


==============================================================================

தொகுதி பங்கீடு !

"உன் தலைவரு ஏன்யா சோகமா இருக்காரு?"
"கூட்டணிக்கு அழைச்ச கட்சிகிட்ட 25 தொகுதி எங்களுக்கு வேணும்ன்னு கேட்டாராம். ஒருவேளை அவங்க சம்மதிச்சிட்டா நிக்க வைக்க ஆளுக்கு எங்க போறதுன்னு கவலையில இருக்காரு !"

"!!!!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates