எத்தனையோ அறிவியலார் வந்து போகலாம் ! - அதிலே
நமது கால அறிஞ ரவர் அப்துல் கலாம் !
முத்தெனவே இராமேஸ்வரம் பெருமை கொள்ளலாம் !
மனதளவில் மாணிக்கமே ! போடு நீ சலாம் !
கனவு கண்டு புதிய பாதை பார்க்கச் சொன்னவர் ! - நம்
கண்களின் முன் பாரதியாய் புரட்சி செய்தவர் !
மனதினுள்ளே நம்பிக்கையின் ஒலி எழுப்பியவர் !
விண்வெளியில் சாதனையால் மண்ணில் ஜொலித்தவர் !
கோளனுப்பும் கோமகனைக் காண வேண்டித்தான்.. - அந்த
மேலுலகம் அவருயிரை எடுத்துக் கொண்டதோ !
மேலனுப்பும் அவராத்மா சாந்தி அடையட்டும் !
மேன்மேலும் அவர்பெருமை எங்கும் பரவட்டும் !
______________________________________________________________
படம்: நன்றி கூகுள் இமேஜஸ்
விஞ்ஞான விதை விதைத்தவர் விண்ணகம் சென்றார்-அவர்தம்
ReplyDeleteவிதைத்த விதைகள் விருட்சமாவது விரைவிலே
கலாம் ஐயா அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திப்போம்
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDelete