மலை போல உனை நம்பி மக்களுண்டு வீட்டினிலே !
தலைக் கவசம் அணியாமல் சுற்றலாமோ ரோட்டினிலே !
சிலை செய்து தலைவனென போற்றிடுவார் அரசியலில் !
தலைக் கவசம் அணியாமல் சிலையாக அவசரமா?
முல்லைக்குத் தேர்தந்த வள்ளலென உனைநினைத்தாய்!
செல்கையிலே வண்டிக்கே தலைக்கவசம் அணிவித்தாய் !
காவலரைக் கண்டவுடன் அஞ்சியதை அணிவதுமேன் ?
காலனுக்கு அஞ்சி இங்கே உனக்கெனவே அணிந்திடுவாய் !
மயிர் கொட்டும், வலிகூட்டும்...கழுத்தோடு என்றாலும்...
உயிர் காக்கும் என்பதைநீ மறவாதே உணர்ந்திடுவாய் !
சொகு சான கவசம் அதைத் தொழில்நுட்பம் தரும்வரையில்
'பிகு' ஏதும் செய் யாமல் தலைக்கவசம் அணிந்திடுவாய் !
நமக்கெனவே அணிந்திடுவோம்...
ReplyDeleteகவிதையின் 'பன்ச்'- சை கருத்தாய் சொன்ன டி.டி க்கு நன்றி !
Deleteஉண்மையின் வெளிப்பாடு உங்கள் கவிதை! நன்று!
ReplyDeleteபுலவர் ஐயாவின் வரவு எனக்குப் பெருமை ! நன்றிகள் ஐயா..! தொடர்ந்து வரவும் !
Delete