முன் குறிப்பு: மன்னன் காலத்தில் ஈ மெயிலா என்று ஷாக் ஆக வேண்டாம்...இவர் மாடர்ன் மன்னன்....! இந்த முன் குறிப்பை பதிவு போட்ட பின் சேர்த்துள்ளேன்....
போண்டிய நாடு - மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இருந்தும், இந்நாட்டு மன்னனுக்கு வாரிசு இல்லை ! வழக்கம் போல் மன்னனுக்கு இரண்டு மனைவியர்...முக்கியமான விஷயம்...மன்னனின் பெயர்...இளவரசன்..! இளவரசனே இல்லாத நாட்டில் இளவரசனுக்கு வாரிசு இல்லை என்பது தான் கவலை !
நாட்டின் மக்கள் தொகைக் கணக்கில் கணிசமான பங்கு வகித்தவர் ராஜ குரு ராயப்பச்சார்யார் - 15 பிள்ளைகளுக்குத் தந்தையானவர்...அவரது யோசனை படி மன்னன் ஏதோ செய்ய. மன்னனுக்கு குழந்தை பிறந்தது. மன்னன் இளவரசனுக்கு வாரிசு வந்த செய்தியினால் நாடே பரபரப்பானது...'லேட்-டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டான்னு' ஊரெல்லாம் கொண்டாட்டம்.
"மன்னா..! பிறந்துள்ள குழந்தை சிவப்பு நிறத்தில் ராஜா போல் இருக்கிறது" - ஜிங் ஜாங் போட்டது மந்திரி !
"என்னது...! என்னைப் போலவே உள்ளதா? ஹா..ஹா..." மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி...
"இல்லை மன்னா...! ராஜ களை இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்..."
"இருக்காதா பின்ன? ஹா..ஹா..இவனுக்கு ராஜா என்று பெயர் சூட்டுகிறேன்...ஹா..ஹா.."
நாட்டின் இளவரசனாய் வந்த 'ராஜா' வளர்ந்து ஆளாகினான்....
பெண்கள் குளிக்கும் குளத்தங்கரையில் இளம் பெண்கள் சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்...அதில் ஒரு இளம் பெண் சொன்னாள்.."நான் இளவரசனைக் காதலிக்கிறேன்...அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்...!" - இந்த உரையாடலை ஒட்டுக் கேட்ட ஒரு அரசவைக் காவலன், மன்னனிடம் ஓடிச் சென்று செய்தியைச் சொன்னான...
"மன்னா ! நான் இளவரசனைக் காதலிக்கிறேன்...அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என ஒரு இளம் பெண் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்...
"என்னது.என்னைக் காதலிக்கிறாளா...! நான் அந்த நங்கையை உடனே பார்க்கவேண்டும்..." - மன்னனின் ரியாக் ஷன்...
"மன்னா...இளவரசை..." என்று தயங்கியே இழுத்தான் செய்தியைக் கொண்டுவந்தவன்..
"ஆமாம்...என் பெயர் தானே இளவரசன் !" - மன்னனின் உடனடி பதிலுக்கு பதில் பேச முடியவில்லை அவனால்...
"ம்...நீ பார்த்த அதே இடத்தில் நாளை நான் அந்த பெண்ணை பார்க்க வேண்டும்...என்னை அழைத்துச் செல்..."
அன்று மதியம், அரசவையின் பொது மின்னஞசல் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது..
"நான் ராஜாவைக் காதலிக்கிறேன்...அவரையேத் திருமணம் செய்து கொண்டு ராணியாக விரும்புகிறேன்" - என்று செய்தி வந்திருந்தது..வல்லுனர்களை வைத்து மின்னஞ்சல் அனுப்பிய இடத்தையும், அனுப்பிய பெண்ணையும் அன்றே கண்டு பிடித்துவிட்டனர் .
அரசவையில் அந்த பெண்ணை வைத்து விசாரித்தான் அரசன்.
"ராஜாவைக் காதலிக்கிறேன் என்றாயே...என் மேல் அவ்வளவு காதலா?"
"ஐயோ மன்னா..! நான் சொன்னது இளவரசனை...!"
"என் பெயர்தான் இளவரசன்...நான் தான் இந்த நாட்டு ராஜா...என்னைத் தானே சொன்னாய் !"
"மன்னா ! மன்னிக்க வேண்டும்...நான் சொன்னது இந்த நாட்டின் இளவரசனான "ராஜா" என்கிற உங்கள் மகனை..."
அவள் சொல்லி முடிப்பதற்குள்..."ஆமாம் தந்தையே...நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்...திருமணம் செய்ய விரும்புகிறோம்" என்று சொன்னபடி நாட்டின் இளவரசனான ராஜா வந்தான்...
மன்னன் முகத்தில் பல உணர்ச்சிகள்..."ஹா...ஹா..." - இது சமாளிப்பு சிரிப்பு..."நல்லது...நாட்டு ராஜாவுக்கு இளவரசன் என்றும், இளவரசனுக்கு ராஜா என்றும் பெயரிட்டதால் இந்த குழப்பம் நேர்ந்துவிட்டது எனக்கு..."
"கவலைப் படாதீர்கள் தந்தையே ! எங்கள் வாரிசுக்கு தாத்தாவான உங்கள் பெயரையே 'இளவரசன்' என்று வைத்து விடுகிறோம்...நான் ராஜாவாகும் போது அவன் இளவரசன் தானே ! குழப்பம் இருக்காது..." என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்...
சுபம் !!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசவையில் மின்னஞ்சல்...! அட...!
ReplyDeleteநல்லா இருக்குங்க கதை...
இவர் மாடர்ன் மன்னன் !
Deleteஎன்ன அரசவைக்கு மின்னஞ்சலா !!!
ReplyDeleteஇது மாடர்ன் மன்னன் என்பதைத் தெளிவு செய்திருக்கிறேன்...! தங்களின் முதல் வருகைக்கு நன்றி..! தொடர்ந்து வரவும் !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா.
பெயர்வைக்கும் போது கவனமாக வைக்கனும் போல உள்ளது..ஹா..ஹா..கதை அருமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
நன்றி ரூபன் !
Deleteநன்றி தளிர் சுரேஷ் ! தொடர்ந்து வரவும் !
ReplyDeleteஎங்கெல்லாம் மின்னஞ்சல்
ReplyDeleteசிறந்த பதிவு
தொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி !
ReplyDelete