.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, July 25, 2016

( கபாலி ) கடி ஜோக்ஸ் - பாகம் - 26

டேய் கபாலி ! வேலை தேடி இன்டர்வ்யூக்குப் போனியே...! என்னாச்சுடா?

"உன் பேர் என்னன்னு கேட்டாங்க...பேரைச் சொன்னேன்...வெளிய அனுப்பிட்டாங்க...!"

"அப்படி என்னடா சொன்ன?"

"கபாலி-டா..........! ந்னு சொன்னேன், "டா" போட்டு பேசறேன்-னு அனுப்பிட்டாங்க..!"

--------------------


"ஏட்டையா ! ரிலீஸ் ஆகிப்போன கபாலி, மூணு மணி நேரத்துக்குள்ள வேறு ஒரு கேஸ்-ல உள்ள வந்துட்டானே ! என்ன செஞ்சான்? ஏதாச்சும் சொன்னானா?"

"திரும்பி வந்துட்டேன்-னு சொல்லு...ன்னு சொன்னான்..!"

----------------------------------------------


கபாலி ...! நீ கத்தியால குத்தின கந்தசாமி ஆஸ்பத்திரியிலே சீரியஸா இருக்காராம்..!"

"மகிழ்ச்சி....!"

"??????????????????"
===========================================================

பக்கத்து வீட்டு கொள்ளைப் பக்கம் தீப்பிடிச்சிருக்கு-ன்னு ஃபயர் சர்வீசுக்கு சொன்னியா?"

சொன்னேன்...ஆனா வரமாட்டாங்களாம்.."

"அப்படி என்னடா சொன்ன?"

"நெருப்புடா-ன்னு சொன்னேன்...பாட்டு பாடறேன்-னு நெனச்சுகிட்டாங்க போல..."



Saturday, July 16, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 6

காட்சி - 6

இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்துவின் தந்தை, சிவாவின் தந்தை, மனோ
-----------------------------------------------------------------------------------------------------

குரல்: முத்து...முத்து...(டக்...டக்.. - கதவு தட்டும் சத்தம்...)

முத்துவின் தந்தை: யாரு? முத்து இல்லையே ! நீங்க யாரு?

மனோ: நான் முத்து படிக்கிற ஸ்கூல்ல டீச்சர்...

மு. தந்தை: ஓ ! அப்படியா...வாங்க...!

சிவாவின் தந்தை: நான் முத்துவோட நண்பன் சிவாவோட அப்பா...!

மு.தந்தை: ஓ ! அப்படியா..! வாங்க...! உட்காருங்க...!என்ன விஷயம்?

மனோ: சார் ! முத்து எங்க போயிருக்கான்?

மு.தந்தை: அவன் எங்கயோ வெளியில போயிருக்கான் சார் !

மனோ: என்ன சார் இது...பையன் காலையில எழுந்து எங்க போறான், என்ன செய்யறான்-னு கவனம் வெச்சுகிறது இல்லையா?

மு.தந்தை: இவனைப் பத்தி எனக்கு இந்த விஷயத்தில கவலை இல்லை சார் ! அவன் ஒரு வெகுளி ! ரொம்ப நல்ல பையன்...!

மனோ: அவன் "வெகுளி"-ன்னு எனக்கும் தெரியும் சார்...அதுக்காக அவனை வெயில் காலத்துல கூட குளி-ன்னு சொல்ல மாட்டீங்களா?

மு.தந்தை: ஓ ! அங்க வர்றீங்களா ! நான் எவ்ளவோ சொல்லி பாத்துட்டேன் சார் ! அவன் கேட்கமாட்டேங்கிறான்...!
எனக்கு ஒரே புள்ள...ரொம்ப செல்லம்..அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா...(உணர்ச்சி வயப்படுகிறார்)

மனோ: ஹலோ..ஹலோ...சார் ! இருங்க..!ரிலாக்ஸ் ! இன்னிக்கு நாட்டுல வளர்ற தீவிரவாத போக்குக்கு இதமாதிரியான பேரண்டிங்கும் ஒரு காரணம்-ன்னு சொல்லுவேன் ...! ஒரே புள்ள..ஒரே பொண்ணு...ன்னு ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி பசங்களுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்க்கிறதுனாலதான், அவங்க தன் இஷ்டத்துக்கு என்னன்னவோ பண்ணி தீவிரவாதியா கூட மாறிடறாங்க...!

மு..தந்தை: சார் ! என்ன சார் இது...! பையன் ஏன் குளிக்க-லன்னு கேட்கலைன்னா தீவிரவாதி ஆயிடுவான்னு புது தியரி சொல்றீங்க?

மனோ: சார் ! உங்க பையன் தீவிரவாதி ஆயிடுவான்னு நான் சாபம் எல்லாம் கொடுக்கல..அவன் நல்லவனா வரணும்ன்னும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் ! நீங்களும் கொஞ்சம் பொறுப்பான அப்பாவா நடந்துக்கங்க...!

மு.தந்தை: உங்க ஆசிக்கும், கரிசனத்துக்கும் ரொம்ப நன்றி சார்...! நாளைக்கு காலையில அவன..நானே...அமுக்கி உட்காரவெச்சு குளிக்க வெச்சிடறேன்...நீங்க என்ன சாப்பிடறீங்க?

மனோ: எதுவும் வேணாம் சார்...அப்ப..நாங்க கிளம்பறோம்...நாளைக்கு காலையில வருவேன் சார்...உங்க பையன் குளிச்சிட்டானான்னு செக் பண்ணுவேன்...

மு.தந்தை: சரி சார் ! கண்டிப்பா வாங்க...!

(தொடரும்...)


Saturday, July 9, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 5

காட்சி - 5
இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை, மனோகரன்
------------------------------------------------------------------------------------------------
தந்தை: என்னடா சிவா...! இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற? என்னாச்சு?

சிவா: அப்பா ! அப்பா ! நம்ம வீட்டுக்கு சி.எம். வர்றாரு...!

தந்தை: chief minister எதுக்குடா நம்ம வீட்டுக்கு வரணும்?

சிவா: அப்பா ! CM-ன்னு நான் சொன்னது, எங்க ஸ்கூல் சாரு...மனோகரன் சாரு..

தந்தை: ஓ ! அவனா..! வரட்டும் ! வரட்டும் !

சிவா: என்னப்பா இது? சாரை போயி அவன் இவன்னு சொல்ற?

தந்தை: அவன் உனக்குதான்டா சாரு ! எனக்கு friend...நாங்க ரெண்டு பேரும் டிகிரி வரைக்கும் ஒண்ணா படிச்சவங்க..!

சிவா: அப்பா..! சார் வந்தாச்சு ...!

தந்தை: வாடா மனோ ! வா ! என்ன திடீர்ன்னு இந்த பக்கம்?  எப்படி இருக்க?

மனோ: ஒண்ணுமில்லடா..! இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்...அப்படியா பார்த்துட்டு போகலாமுன்னுதான்...

தந்தை: நல்லது..என்ன சாப்பிடற?

மனோ: குடிக்க ஜில்-லுனு தண்ணி மட்டும் குடு...!

தந்தை: சிவா ! சாருக்கு தண்ணி கொடுப்பா !  அப்புறம் என்ன...வீட்டுல எல்லாம் சௌக்கியம்தான..?

(சிவா தண்ணீருடன் வருகிறான்)

சிவா: சார் ! வாட்டர்...

மனோ: தாங்க்ஸ்...ம்...சிவா கொடுத்தது செம ஐஸ்...! (சிரிக்கிறார்) சரி சிவா..! லீவெல்லாம் எப்படி போகுது? useful-ஆ ஏதாச்சும் செஞ்சியா?

சிவா: லீவு ஜாலியா போகுது சார் !

மனோ: உன்னோட close friend ஒருத்தன் இருப்பானே ! அவன் பேரு என்ன? ம்...அருணாச்சலம்...அவன் என்ன செய்யறான்?

சிவா: சார் ! அவன் பேரு இப்போ அருணாசலம் இல்ல..முத்து...

மனோ: அவனே பேரை மாத்திகிட்டானா? ஏன்?

சிவா: தெரியல சார்...!

தந்தை: மனோ ! அந்தப் பய முழுகாம இருக்கிற சேதி தெரியுமா உனக்கு?

மனோ: என்னடா ஜோக் அடிக்கிற?

சிவா: சார் .. அவன் குளிச்சு 4 நாள் ஆவுது...அதான் அப்பா சொல்றாங்க...

மனோ: ஏன் ? என்னாச்சு? அவங்க வீட்டுல தண்ணி கஷ்டமா?

தந்தை: தண்ணி கஷ்டமெல்லாம் இல்ல...அவனுக்கு இஷ்டம் இல்ல அவ்ளோதான்..

மனோ: என்ன சொல்ற நீ?

தந்தை: அது என்னவோ தெரியலடா..! குளிச்சா தான் செத்து போயிடுவோம்-னு சொல்லிகிட்டுத் திரியறான் அவன்...

மனோ: அப்படியா...அவன் நல்ல பையனாச்சே..! வெகுளிப் பையன்...

தந்தை: எனக்கு என்னவோ அவன் வெகுளி இல்ல..ஒரு பித்துக்குளின்னு தோணுது...! (சிரிக்கிறார்)

மனோ: சரி...என்னோட கொஞ்சம் வர்றியா இப்ப?

தந்தை: எங்கடா மனோ?

மனோ: அந்த முத்து வீட்டுக்குப் போகலாம்...

தந்தை: ஓ ! போலாமே ! சிவா...! வீட்டைப் பார்த்துக்கோப்பா...! நான் மனோவோட போயிட்டு வர்றேன்...

(தொடரும்...)

Sunday, July 3, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 3 & 4

காட்சி - 3

பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை
-------------------------------------------------------------------------------------------------------
சிவா: அப்பா ! அந்த முத்து ரொம்ப மோசம்பா !

தந்தை: ஏன்டா ! என்னடா செஞ்சான் அவன்?

சிவா: அவன் குளிக்கவே மாட்டேன்-ங்கிறாம்பா ! குளிச்சு 4 நாள் ஆவுது..

தந்தை: ஐயய...இது என்னடா கதை? எப்படிடா இந்த புழுக்கத்திலயும்...

சிவா: அப்பா ! அவன் ஒரு வெகுளி ப்பா ! அவன எப்படியாவது திருத்தணும்பா ! அவன், குளிச்சா தன்னோட உயிர் போயிடும்-னு நினைக்கிறான்-பா...அது ஏம்பா?

தந்தை: அவன் எதையும் சீக்கிரமா நம்பிடற ஆளுடா...! எவனாவது அவன்கிட்ட, "நீ குளிச்சா உயிர் போயிடும்-"ன்னு விளையாட்டா சொல்லியிருப்பான்...சரி...சரி...நாம என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்...இப்ப போயி வேலைய பாரு...

சிவா: சரிப்பா !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி - 4

பாத்திரங்கள்: முத்து, அவன் தந்தை
இடம்: முத்துவின் வீடு
-------------------------------------------------------------------------------------------------------


தந்தை: முத்து ! முத்து ! இருடா  கொஞ்ச நேரம் ! இதோ பூசைய முடிச்சிட்டு வர்ரேன்...! அதுக்குள்ள கிளம்பிட்டயா?

(பூசையிலிருந்து வெளியே வந்து)

தந்தை: முத்து...இங்க பாருடா...! இன்னிக்கு வேலைக்காரி வரல..நீ பாட்டுக்கு ட்ரெஸ்-ஸ கழட்டிபோட்டுட்டு போயிடாதே ! கையோட தோச்சிட்டு வா !

முத்து: இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ்-பா ! நான் இன்னும் ட்ரெஸ் மாத்திக்கல..நீங்க சொல்லிட்டீங்க...இனிமே...இந்த ட்ரெஸ்-லயே இன்னிக்கு இருந்திடறேன்...!

தந்தை: டேய் ! வெயிலுக்கும் அதுக்கும் ரொம்ப ஸ்மெல் ஆகும்டா..!

முத்து: அப்போ எனக்கு ஃபாரினி செண்ட் வாங்கிக் கொடு...!

தந்தை: செண்ட் போட்டுகிட்டு போனாலும் போவ...குளிக்க மாட்ட போலிருக்கு...! எல்லாம் என் நேரம்...!

முத்து: அப்பா ! நான் உயிரோட இருக்கணுமா...வேணாமா?

தந்தை: (சலிப்புடன்) ஆமாம்..இத ஒண்ணு சொல்லி பயம் காட்டுடா...போ ! போ! எப்படியாவது போ...!

முத்து: எப்படியாவது எப்படிப்பா போகறது...இப்படித்தான் வெளியில போக முடியும்...
(சொல்லியவாரே வாசல் பக்கம் செல்கிறான்)

தந்தை: (தனக்குள்) கடவுளே! இந்த பையனுக்கு நல்ல புத்தியக் கொடு...!

(தொடரும்)

Tuesday, June 28, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 2

காட்சி - 2

இடம்: ஒரு பூங்கா
பாத்திரங்கள்: முத்து, நண்பன் சிவா
-------------
முத்து: டேய் சிவா ! என்னடா இது ! மாட்ச் - பார்க்கப் போகாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?
சிவா: சும்மாதான்டா ! வீட்டுல கரண்ட் இல்ல...! அதான் இங்க வந்து காத்து வாங்கலாமுன்னு...இங்க பாரு...இந்த பார்க்க-ல இருக்கிற பூவெல்லாம் என்ன வாசனை பாரு...!

(முத்து அருகில் வருகிறான்)

சிவா: டேய் ! என்னடா இது ! திடும்-ன்னு ஒரே நாத்தமாயிருக்கு !

முத்து: ம்...எனக்கு ஒண்ணும் தெரியல...!

சிவா: ம்...எனக்குத் தெரிஞ்சுபோச்சு ! வெற்றிகரமா 4-வது நாளா இன்னிக்கும் நீ குளிக்கல...! அதானே ?

முத்து: போடா டேய் !

சிவா : ஏன்டா முத்து ! இப்படி புழுக்கத்துல உன்னால எப்படிடா குளிக்காம இருக்க முடியுது?

முத்து: சிவா ! நான் உயிரோடு இருக்கனும்னா, என்னால குளிக்க முடியாது...

சிவா: குளிச்சா செத்து போயிடுவ-ன்னு உனக்கு யார்-டா சொன்னா?

முத்து: சிவா...தேவையில்லாம ஏதேதோ கேட்காத...நான் கிளம்பறேன்...!

சிவா: உன்னோட இந்த பழக்கத்தினாலேயே உன்னோட நண்பர்கள் எல்லாம் உன்னை விட்டு போகப்போறாங்க பாரு !

முத்து: அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லடா ! முதல்ல நான் உயிரோட இருக்கணும் ...! அத விடு...நான் இப்போ மேட்சுக்குப் போறேன்...நீ வர்றியா இல்லையா?

சிவா: இல்லடா..! நான் வரலே ! வீட்டுக்குப் போகணும் !

முத்து: சரிடா ! நான் கிளம்பறேன்...பாக்கலாம்...

(செல்கிறான்)

சிவா: (மனசுக்குள்) ச்சே ! இவனத் திருத்தவே முடியாது போலிருக்கு ! ஆனாலும் நல்ல பையன்...இவன பத்தி நம்ம அப்பாகிட்ட பேசிப்பார்ப்போம் ...!

Sunday, June 26, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம்

காட்சி - 1
இடம்: முத்துவின் வீடு
------------------------------------------

முத்துவின் தந்தை: டேய்  அருணாசலம் ! அருணாசலம், என்னடா இது? காலையிலேயே எழுந்துகிட்டு, ட்ரெஸ் பண்ணிகிட்ட கிளம்பிட்டே !

முத்து: அப்பா ! உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? என் பேரு அருணாசலம் கிடையாது...முத்து...

தந்தை: டேய் கண்ணா ! அருணாசலம்-ங்கிறது உங்க தாத்தா பேருடா...!

முத்து: இருந்தா என்ன? முத்து கூடத்தான் என்னோட இன்னொரு தாத்தா பேரு...அப்புறமென்ன...அருணாசலம், விருதாசலம்-ன்னு பேரு...

தந்தை: சரி...சரி...மூணு நாளா முழுகாம இருந்தியே ! இன்னிக்கு முழ்கிட்டியா? இல்ல முழுகாமலேயே ட்ரெஸ் பண்ணிகிட்டு கிளம்பிட்டியா?

முத்து: இதோ பாருங்க அப்பா ! நான் உயிரோட இருக்கணும்னா என்னை இனிமே குளிக்க சொல்லதீங்க...

தந்தை: அய்யய்யோ ! முத்து என்னடா சொல்ற?

முத்து: அப்பா ! எல்லாம் நேரம் வரும்போது விவரமா சொல்றேன்...

தந்தை: என்னவோடா முத்து ! நீ நல்லாயிருந்தா சரி...ம்...உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரல...ஏதோ 21 வயசுக்கு மேல ஆனா தானா பொறுப்பு வராதா-ன்னு பார்க்கிறேன்...படிப்பு கூட ஓபன் யுனிவர்சிட்டியில படிச்சுக்கலாம்...

முத்து: ஓபன் யுனிவர்சிட்டி-ன்னா என்னப்பா?

தந்தை: திறந்த நிலைப் பல்கலைக் கழகம்...

முத்து: போப்பா ! நான் அங்கெல்லாம் படிக்க மாட்டேன்...மழை பேஞ்சா...நனைஞ்சிடுவேன் ...திறந்தே இருக்கில்ல...!

தந்தை: ஐயோ...கர்மம்டா ! உன்னை பெத்ததுக்கு...

முத்து: சரி..சரி..நான் வர்ரேன்-பா...!

தந்தை: டேய் ! முத்து..இருடா...எங்கடா போற?

முத்து: மேட்ச்-பார்க்க போறேன்-பா...

தந்தை: என்னது மேட்ச்சா...டேய் ! அதெல்லாம் நாங்க பார்த்து அந்த அந்த நேரத்தில செய்வோம்டா..

முத்து: அப்பா ! நான் கிரிக்கெட் மேட்ச் சொன்னேன்பா... நான் இப்ப சொல்லட்டுமா...உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரல...!

தந்தை: டேய் ! என்ன சொன்ன? நில்லுடா...(முத்து ஓடிவிடுகிறான்)...(தனக்குள்) ம்...எல்லாம் என் நேரம்...

(ரேடியோவில்..."நிலையத்தில் தற்போது நேரம் சரியாக ஆறு மணி ஐம்பது நிமிடம்...")

தந்தை: ச்சே ! இது வேற...முதல்ல இந்த ரேடியோவை நிறுத்துவோம்...!

(தொடரும்....)

Saturday, May 21, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 25

 தொழில் போல மனசு !

"நம்ம பொரி வியாபரி பொன்னம்பலத்துக்கு வெள்ள மனசுங்க ! ரொம்ப நல்லவரு"

"பொரிசுத்தமானவர்-ன்னு சொல்லுங்க !"


---------------------------------------------------------------



கத்ரி-னா?!




"ஏங்க இந்த கத்ரி-ல நம்ம பையனுக்கு மொட்டை அடிக்கலாமா?"

"கத்திரி என்னா கத்தியால கூட அடிச்சிடலாம் !"



 ______________________________________________________


டெபாசிட்




"நம்ம தலைவரு பேங்க்-ல போட்டிருந்த ஒரு லட்ச ரூபா FD-யை வேற யாரோ கையெழுத்து போட்டு வாங்கிகிட்டாங்களாம் !"

"பேங்க்-லயும் டெபாசிட் போச்சா ....?!!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates