காட்சி - 5
இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை, மனோகரன்
------------------------------------------------------------------------------------------------
தந்தை: என்னடா சிவா...! இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற? என்னாச்சு?
சிவா: அப்பா ! அப்பா ! நம்ம வீட்டுக்கு சி.எம். வர்றாரு...!
தந்தை: chief minister எதுக்குடா நம்ம வீட்டுக்கு வரணும்?
சிவா: அப்பா ! CM-ன்னு நான் சொன்னது, எங்க ஸ்கூல் சாரு...மனோகரன் சாரு..
தந்தை: ஓ ! அவனா..! வரட்டும் ! வரட்டும் !
சிவா: என்னப்பா இது? சாரை போயி அவன் இவன்னு சொல்ற?
தந்தை: அவன் உனக்குதான்டா சாரு ! எனக்கு friend...நாங்க ரெண்டு பேரும் டிகிரி வரைக்கும் ஒண்ணா படிச்சவங்க..!
சிவா: அப்பா..! சார் வந்தாச்சு ...!
தந்தை: வாடா மனோ ! வா ! என்ன திடீர்ன்னு இந்த பக்கம்? எப்படி இருக்க?
மனோ: ஒண்ணுமில்லடா..! இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்...அப்படியா பார்த்துட்டு போகலாமுன்னுதான்...
தந்தை: நல்லது..என்ன சாப்பிடற?
மனோ: குடிக்க ஜில்-லுனு தண்ணி மட்டும் குடு...!
தந்தை: சிவா ! சாருக்கு தண்ணி கொடுப்பா ! அப்புறம் என்ன...வீட்டுல எல்லாம் சௌக்கியம்தான..?
(சிவா தண்ணீருடன் வருகிறான்)
சிவா: சார் ! வாட்டர்...
மனோ: தாங்க்ஸ்...ம்...சிவா கொடுத்தது செம ஐஸ்...! (சிரிக்கிறார்) சரி சிவா..! லீவெல்லாம் எப்படி போகுது? useful-ஆ ஏதாச்சும் செஞ்சியா?
சிவா: லீவு ஜாலியா போகுது சார் !
மனோ: உன்னோட close friend ஒருத்தன் இருப்பானே ! அவன் பேரு என்ன? ம்...அருணாச்சலம்...அவன் என்ன செய்யறான்?
சிவா: சார் ! அவன் பேரு இப்போ அருணாசலம் இல்ல..முத்து...
மனோ: அவனே பேரை மாத்திகிட்டானா? ஏன்?
சிவா: தெரியல சார்...!
தந்தை: மனோ ! அந்தப் பய முழுகாம இருக்கிற சேதி தெரியுமா உனக்கு?
மனோ: என்னடா ஜோக் அடிக்கிற?
சிவா: சார் .. அவன் குளிச்சு 4 நாள் ஆவுது...அதான் அப்பா சொல்றாங்க...
மனோ: ஏன் ? என்னாச்சு? அவங்க வீட்டுல தண்ணி கஷ்டமா?
தந்தை: தண்ணி கஷ்டமெல்லாம் இல்ல...அவனுக்கு இஷ்டம் இல்ல அவ்ளோதான்..
மனோ: என்ன சொல்ற நீ?
தந்தை: அது என்னவோ தெரியலடா..! குளிச்சா தான் செத்து போயிடுவோம்-னு சொல்லிகிட்டுத் திரியறான் அவன்...
மனோ: அப்படியா...அவன் நல்ல பையனாச்சே..! வெகுளிப் பையன்...
தந்தை: எனக்கு என்னவோ அவன் வெகுளி இல்ல..ஒரு பித்துக்குளின்னு தோணுது...! (சிரிக்கிறார்)
மனோ: சரி...என்னோட கொஞ்சம் வர்றியா இப்ப?
தந்தை: எங்கடா மனோ?
மனோ: அந்த முத்து வீட்டுக்குப் போகலாம்...
தந்தை: ஓ ! போலாமே ! சிவா...! வீட்டைப் பார்த்துக்கோப்பா...! நான் மனோவோட போயிட்டு வர்றேன்...
(தொடரும்...)
No comments:
Post a Comment