கண்டவுடன் காதலாச்சாம் கதையைக் கேளுங்க ! - இங்கே
கணவன், மனைவி ஆகிட்டாங்க இதையும் பாருங்க !
உண்டவுடன் உண்டாகிடும் ஏப்பத்தைப் போல - எல்லாம்
உடனடியா முடிவுசெஞ்சு நடத்திக் கிறாங்க !
இருமனமும் சேருவதே திருமண மாங்க ! - இங்கே
விழிகள்பேசி இமைப்பொழுதில் நடந்திடு மாங்க !
பொறுமையில்லை, 'பகிர்தல்'யில்லை அவசரக் கோலம் ! - கொஞ்சம்
பேசிப்பார்க்க நேரமில்லை 'பரபர'க் காலம் !
கல்யாணமும் முடிஞ்சுமூணு நாட்களி லேயே ! - மனம்
கசந்திடுமாம், பார்க்கக்கூடப் பிடிப்ப தில்லையாம் !
எல்லாமுமே முடிஞ்சிடிச்சாம் பிரிய வேணுமாம் ! - ஏதோ
திருவிழாவை 'ரத்து'செய்தல் போல இதுவுமாம் !
உறவுக்குள்ளே விட்டுக்கொடுத்து வாழ்ந் திடலாமே!- அந்த
உறவினையே விட்டுவிட்டு வாழ்ந் திடலாமா?
பிரிவினிலே சுகமிருக்கா சிந்திக்க வேணும் - நல்லப்
'புரிதல்'எனும் பண்பினையே வளர்த்துக்க வேணும் !
அருமை... நல்ல புரிதல் வேண்டும்...
ReplyDeleteஒரு வரிப் பின்னூட்டத்தில் மனதார வாழ்த்திவிடுகிறீர்கள் ! மிக்க நன்றி !
Deleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் ! என் சார்பில் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Deleteதங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் ! என் சார்பில் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDelete