வந்ததுவே! வந்ததுவே! இன்பம்தரும் பொங்கல் ! - நல்ல
வழியதுவும் காட்டிடுமே பிறந்திடும் தைத்திங்கள் !
செந்தமிழர் பண்டிகையாய் சிறந்திடும்இப் பொங்கல் ! - புது
மங்கலமாய் வாழ்வுதரும் வெற்றிகளும் தருமே !
கதிராலே ஒளிவீசும் கதிரவனும் சாமி ! - அவன்
கருணைக்குத் தலைவணங்கி நிற்குமிந்த பூமி !
உதிராத மஞ்சளுடன், இஞ்சியதன் கொத்தும் - நல்லக்
கரும்புடனே செய்திடுவோம் அவனுக்கொரு படையல் !
முப்போகம் செழித்திடவே உழவன்காணும் கனவு ! - அவன்
உழைப்பாலே நினைவானால், நமக்கெல்லாம் உணவு !
எப்போதும் மாடோடும், ஏரோடும் வயலில் - அவன்
பாடுபட நமக்கெல்லாம் நிறைந்திடுமே வயிறு !
பருவத்து மாற்றம்போல் மாறும்அவன் வாழ்வும் ! - அவன்
பயனுக்குத் தொழில்நுட்பம் செய்தளிப்போம் நாமும் !
வருடத்தில் ஒருநாள்தான் அவனுக்கெனத் திருநாள் ! - அவனை
வணங்கிநன்றி சொல்லிநாமும் பெருமைகொள்வோம் இந்நாள் !
வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மனதை நெருடியது... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ! மிக்க மகிழ்ச்சி !
Deleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
ReplyDeleteஇனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
ReplyDeleteஉறவினர்கள் அனைவருக்கும் ! சிறப்பான கவிதை வரிகளுக்கும்
என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
மிக்க நன்றி ! உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
Delete