(சிறுவன் / சிறுமி வேண்டுவது போல் எழுதப்பட்டது)
புதியஆண்டு பிறக்குதாமே சாமி ! - புதுசா
பூமிக்குநீ என்னதருவ சாமி !
அதிகமாநான் கேக்கலயே சாமி - கொஞ்சம்
அமைதியாஎன் வேண்டுதலக் கேள்நீ !
உறைஞ்சிருக்கும் பனிமலைகள் அழகா - இந்த
உலகமெல்லாம் படைச்சுவெச்ச நெறையா !
கரைஞ்சிருச்சே அத்தனையும் குறைவா ! - ஏதோ
'க்ளோபல்வார்மிங்' காரணமாம் இறைவா !
பச்சைப்பசேல் காடுகளும் அழகா - இந்த
பூமியிலே படைச்சுவெச்ச நெறையா !
மிச்சம்மீதி தானிருக்கு இப்போ - நெறைய
கட்டிடங்கள் கட்டிவெச்ச பிறகு !
மாசாமாசம் மூணுதரம் மழையாம் ! - அந்தக்
காலமெல்லாம் பாக்கலநான் சாமி !
காசாகொட்டி வாங்கறோமே தண்ணி ! - நல்ல
மரத்தையெல்லாம் வெட்டினத எண்ணி !
'பீச்சு'(BEACH)தாண்டி கடலும்உள்ள வருதாம் ! - இது
தொடர்ந்திச்சின்னா நிலங்கள் குறைஞ்சிவிடுமாம் !
மூச்சுவிடும் காத்து அசுத்தமாச்சாம் ! - இதுக்குப்
'பொல்யூஷனே' காரணமா ஆச்சாம் !
சின்னபுள்ள என்னபாத்தா உனக்கு ! - கொஞ்சம்
பாவமாகத் தோணலயா சொல்லு !
என்னத்தப்பு செஞ்சுபுட்டேன் நானு ! - எங்க
தலைமுறைங்க வாழவழிய சொல்லு !
முன்னவங்க செஞ்ச தப்புக்காக - நான்
முன்னூறு 'சாரி' சொல்றேன் சாமி !
இன்னொரு'சான்ஸ்' எமக்குகொடு சாமி ! - இனிமே
இப்படியெல்லாம் செய்யமாட்டோம் சாமி !
இயற்கையெல்லாம் 'ரீசெட்' பண்ணு சாமி ! - முன்ன
நல்லாயிருந்த நெலமைக்குத்தான் மாத்தி !
பயங்கரமா 'ட்ரீட்' வெப்பேன் சாமி ! - நல்லா
'பட்டர்ஸ்காட்ச்' கேக்கு வாங்கி சாமி !
அருமை...
ReplyDeleteரசித்தேன்... வாழ்த்துக்கள்...
கட்டுரையிலும் கலந்து கொள்ள அழைக்கிறேன்... நன்றி...
தனபாலன் ஐயா... .பதிவு இடப்பட்ட ஒரு சில நிமிடங்களில் படித்து, ரசித்து, வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி..கட்டுரைப் போட்டிக்கு தயார் செய்து கொண்டிள்ளேன். கண்டிப்பாகக் கலந்து கொள்வேன்.
Deleteபெரியவர்களின் சிந்தனையை, ஆசையை
ReplyDeleteசிறுவனின் வார்த்தைகளில் கவிதையாகத்
தந்தவிதம் அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா ! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் மேலும் பல கவிதைளைப் படிக்க ஆவலுடன் உள்ளேன் !
Deleteஅருமையான வேண்டுதற் பா மாலை !வாழ்த்துக்கள் சகோதரரே
ReplyDeleteஇனிய புத்தாண்டில் இத்தனையும் நிறைவேறிட
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! தொடர்ந்து வாருங்கள் !
Deleteவணக்கம்
ReplyDeleteபிரசாத்(அண்ணா)
சிறுவனின் சிந்தனைக்கு அமைவாக கவிதை எழுதிய விதம் அருமை...ஒவ்வொருவரிகளிலும் சிறவனின் வேண்டுதல் சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். அண்ணா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டி எழுதுங்கள்.... கட்டாயம் ...கவிதைப்போட்டி சான்றிதழ் தளத்தில் போட்டுவைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்
எனது புதியதளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன் ! மற்றவர்களை மனதார ஊக்குவிக்கும் உங்கள் பண்பு என்னைக் கவர்கிறது. நன்றி ! கட்டுரைப் போட்டிக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். கலந்து கொள்வேன் !
Deleteமுன்னவங்க செஞ்ச தப்புக்கு சாரி கூறும் சிறுவனின் கவிதை மனதை தொட்டுவிட்டது, பிரசாத்! காடுகளையும், நதிகளையும் அழிக்கிறவர்கள் உங்கள் இந்த கவிதையைப் படிக்க வேண்டும், அப்போதாவது மனம் மாறுவார்களா?
ReplyDeleteசிறுவனின் பிரார்த்தனைக்கு கடவுள் இரங்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மனமார வாழ்த்தி, ரொம்பவும் நெகிழ்வான கருத்து பகிர்ந்ததற்கு நன்றி அம்மா !
Delete