போராட்டம் என்றாலே 'போர்' போல எனும்பொருளில்
பெரியதொரு வன்முறையில் களம்காண்பார் சிலபேர்கள் !
பாராட்டும் வகையினிலே இடையூறு அவையின்றி
பேரமைதிப் போராட்டம் செய்வார்கள் சிலபேர்கள் !
குடியரசு நாட்டினிலே கோரிக்கை வைப்பதற்கு...
முறையான வழியதுதான் 'போராட்டம்' என்றிடினும்
அடிதடியும் சண்டைகளும் சுயநலத்தில் ஏவிடுவோர்
நடத்திடுமோர் நாடகமாய் நாடோறும் காண்கின்றோம் !
அநியாயம் செய்வோரும் போராட்டம் எனும்பெயரில்
அக்கிரமங்கள் செய்வதையும் அங்கிங்கு பார்க்கின்றோம் !
துணிவான மனதோடு ஒடுக்கங்கள் செய்யாமல்
சட்டத்தைக் காப்பாரும் பாசாங்கு செய்கின்றார் !
பொதுநலமே முதன்மையென மகாத்மா போன்றோர்கள்
போராட்டம் செய்தனரே ! பாராட்டி வாழ்த்திடலாம்!
எதுநலமே என்றேதும் உணராது பணத்திற்கே
குழுசேர்ந்து குரல்கொடுத்தல் யாருக்கு லாபமிங்கே?
செய்திடுவோம் போராட்டம் அமைதிமிகு புரட்சியென!
செய்வோர்கள் எல்லோர்க்கும் நலன்பயக்கும் காரணத்தில் !
உய்த்திடுமே உலகமெலாம் நல்வழியில் தான்தோய்ந்து !
உயர்வுரலாம் எல்லோரும் ஒருசேரத் தானிங்கு !
போராட்டம் எதற்கு என்று தெரியாமலே கலந்து கொள்பவர்கள் அதிகம் பேர்...
ReplyDeleteஇன்றைய போராட்டமும் வீண், எதற்கு போராட்டம் வேண்டும் என்பதை நன்றாகவே சொல்லி உள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தனபாலன் சார் !
Deleteவணக்கம்
ReplyDeleteபிரசாத்(அண்ணா)
தனபாலன் அண்ணா சொன்ன மாதிரி எதற்கு என்று தெரியாமல் கலந்து கொள்பவர்கள் அதிகம் .பேர்.அதில் நானும் ஒருவன் முதலில் சொல்லிவிடுகிறேன்...
செய்திடுவோம் போராட்டம் அமைதிமிகு புரட்சியென!
செய்வோர்கள் எல்லோர்க்கும் நலன்பயக்க
போராட்டம் எதற்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக அருமையாக கவிதை வடிவில் சொல்லிய விதம் நன்று... மேலும் பல கவிதைகள் மலர எனது வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள் ரூபன் !
Delete