அத்தியாவசய பொருட்கள் அவை யாதெனில்..
"அத்தியாவசய பொருட்கள் பால், பருப்பு-ன்னு பட்டியல் எடுத்து அதுக்கு வரி குறைப்பு கேட்கலாம்-ன்னு பார்த்தா, அந்த லிஸ்ட்-ல 'செண்ட் பாட்டில்'-ல சேர்க்க சொல்றீங்களே !"
"ஆமாங்க...தண்ணி இல்லாம பல நாள் குளிக்காம இருக்கும் போது, அதுதானே அத்யாவசமா இருக்கு,,,!"
"???"
குவாரி டு டாக்டர் !
"குவாரி-யில கல் உடைச்சிகிட்டு இருந்தவரு மறுவாழ்வு பெற்று, நல்லா படிச்சு, இப்போ பெரிய டாக்டரா இருக்காராம் !"
"அப்படியா ! என்ன டாக்டர்?"
"'ஸ்டோன்' சர்ஜனாம்...!"
பயில்வான் ஆவறது ஈஸியா?
"தினமும் உடற்பயிற்சி செஞ்சு, நல்ல பயில்வான் ஆகணும்-ன்னு குறிக்கோளோட ஆரம்பிச்சவரு...பாதியிலேயே முயற்சியக் கைவிட்டுட்டாராம் !"
"பயில்வான் ஆக நெனச்சவரு ஃபெயில்வான் ஆயிட்டாரு-ன்னு சொல்லுங்க !"
"!!!"
ஹா... ஹா... ஹா... கடி ஜோக்ஸ் என்று சொல்லி பொருத்தமாகவே கடிக்கிறீங்க நண்பரே
ReplyDeleteத.ம.1
நாமளே "கடி"ன்னு சொல்லிட்டா நல்லது...இல்லாட்டி படிப்பவர்கள் "கடி" என்று கடுப்பாகி விடுவார்கள்...!!முதலில் வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி ஜி!
Deleteஹா... ஹா... ஸ்டோன்' சர்ஜன் சூப்பர்...
ReplyDeleteநன்றி டி.டி !
Deleteஅருமையான கடிகள்
ReplyDeleteநன்றி கவிஞரே !
Deleteசிரித்தேன். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteபெயில்வான் சூப்பர்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஅனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.
ReplyDelete