"என் பையன்... கிரிக்கெட் பந்து, கால்பந்து, ஹாக்கி பந்து-ன்னு எல்லா விளையாட்டு பந்துகளையும் வெச்சு ஆராய்ச்சி செய்யறான்....!"
"உங்க பையன் ஒரு பா(Ba)லியல் நிபுணர்-ன்னு சொல்லுங்க !"
--------------------------------------
"இந்தத் த்யேட்டர்ல, இடைவேளையின் போது, பாலும் பழமும் இலவசமா கொடுப்பாங்களா?"
"ஏன் கேட்கறீங்க?"
"பால் கனி சீட்டு வாங்கிட்டு வந்திருக்கேனே !"
--------------------------
"அந்தத் தூங்கு மூஞ்சி நடிகரை வெச்சு ஒரு படம் எடுத்தீங்களே... என்ன ஆச்சு?"
"படம் வெளியாகும்-ன்னு கனவுல கூட நினைக்க முடியல...!"
"!!!!"
ஹாஹாஹா! ரசித்தேன்!
ReplyDeleteநன்றிகள் தளிர் சுரேஷ் !
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி வெங்கட் ஜி ! தொடரவும்..!
Delete