"சதுரம், செவ்வகம், முக்கோணம் -ன்னு ஷேப்ஸ் பாடத்தில வெச்ச டெஸ்ட்டுல என்னடா மார்க்கு?"
"வட்டம்-பா !"
"???"
"ஆடித் தள்ளுபடியில வாங்கின கார் எப்படி இருக்குங்க?"
"ஆடிப் போயி..இப்போ தள்ளும் படி இருக்கு...!"
"!!!"
"தொழில் செய்யறோமுன்னு நாலு பேரா சேர்ந்து 'லோன்' வாங்கினிங்களே...என்ன ஆச்சு?"
"லோனைத் திருப்பிக் கட்டணும்-ன்னு சொன்னவுடனே, என்ன லோன்லியா விட்டுட்டு போயிட்டாங்க...!"
"!!!"
ரசித்தேன். பாராட்டுகள்.
ReplyDelete