விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வருவாள்
கவிதைப் பெண்ணென்று..
நிரந்தரமாய் கண் மூடி விட்டாயோ?
இனி அவள் தரும் பாடல் வரிகளை
யார் எமக்கு படைத்துத் தருவார் ?
ஆனந்த யாழை மீட்டி, தேசிய விருதினால்
பேரானந்தம் தந்தாய் தமிழுக்கே ...!
இன்று, சோக கீதம் மீட்ட வைத்துச் சென்றதுவும் நியாயமா?
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்...!
இளம் வயது...! எளிய பண்பு...
ஏனிந்த அவசரம்?
போகாதே ! போகாதே ! என்று சொல்கிறோம்...!
உன் பாடல் கேட்கும்போதெல்லாம்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை போல்தான் !
பல்லாயிரம் பாடல்கள் நீ படைப்பாய் !
அதையெல்லாம் வரி வரியாய் ரசிக்க வேண்டும் என்றிருந்தோம் !
சொர்க்க லோகத்தில் பாடல் பூக்கள் தொடுப்போர் இல்லை போல...!
அதனால் தான் உன்னை அழைத்துக் கொண்டான் அந்தக் கடவுள் !
உன் புகழ் ஓங்கிட உன் பாடல் பாடுவோம்...
இந்நாளும்...எந்நாளும்...
நல்லதோர் இரங்கற்பா....
ReplyDeleteஅவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்....
'அழகே அழகே'
ReplyDelete'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'
ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்
நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!
ஆதலால்,
ஒரு பாவலன் / கவிஞன்
சாவடைந்ததாக வரலாறு இல்லையே!
ஆயினும்
நாமும்
துயர் பகிருகிறோம்!