.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, January 14, 2016

போகி, பொங்கல், பொன்னம்மா !




​போகி வந்தாச்சு ! பூங்கொடியே ! பொன்னம்மா !
   போயே போயாச்சு ! துன்பம்இனி இல்லம்மா !
ஆக்கி வெப்போமே ! பொங்கல புதுபானையில் !
   ஆகும் நம்காலம் ! நாளை வரும் வேளையில் !
உலகப் பொதுவிளக்காம்...சூரியனை வேண்டியே !
   கரும்பும், பொங்கலையும் படையலென வெப்போமே !
கலகம் அதுநீக்கி, நன்மையெல்லாம் வந்திடும் !
   கரும்பு போல்இனிக்கும் வாழ்வதுவும் கூடிடும் !
மஞ்சள் கொத்துடனே  இஞ்சிக் கொத்தும் சேர்த்துநீ !
    பொங்கும் பானையில கட்டிவெச்சுக் கும்பிடு !
நெஞ்சில் நெனச்சிருநீ ! நமக்குஎன்றும் உதவிடும்...
     நேசம் அதுமிகுந்த மாட்டுக் கூட்டம் தன்னையும் !
அழகர் கோயிலிலே அர்ச்சனையும் செய்யுவோம் !
   அழகாய் மருமகளைத் தைமகள்அவ காட்டுவா!
உழவர் நமக்கெல்லாம் இயற்கையேதான் பொன்னம்மா !
  உயர்ந்த தெய்வமாகும் உண்மையிது பொன்னம்மா !
   

6 comments:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !

      Delete
  2. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !

      Delete
  3. வணக்கம்
    அண்ணா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் ! தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates