திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் பதிவிட்ட "கையெழுத்து" என்ற பதிவினை இன்று படித்தேன். எடுத்துக் கொண்ட தலைப்பும், பதிவெழுதிய அணுகுமுறையும் என்னைக் கவர்ந்தது. அது ஒரு கவிதையாகவே எனக்குப் பட்டது. உடனே, அந்த பதிவை அப்படியே பத்தி வாரியாகக் கலப்படம் செய்யாத கவிதையாய் மாற்றி கீழே பதிவு செய்துள்ளேன். ஐயாவின் கட்டுரை படிக்க..
இங்கே சொடுக்கவும்
என்றிட்டேன் முதன் முதலாய்
எனும் நினைவு இன்றில்லை !
அன்று உயர் பள்ளியிலே
பயின்ற போது தானிருக்கும் !
பணிசேரும் வரை யினிலும்
பைந்தமிழில் தான் இட்டேன் !
பணிசேர்ந்த பின் தொடங்கி..
பலவிதமாய் மாறி யதே !
வங்கியிலே கணக் கொன்றை
தொடங்கிடும் அவ் வேளையிலே
அங்குள்ள படிவத்தில்
பதிந்திடவே தான் வேண்டும்...!
ஆவணங்கள் காசோலை...
அளிக்கின்ற போதெல்லாம்
சோதனை சரி பார்ப்பதற்கும்
ஏதுவாக அமைந் திருக்கும்!
சாட்சி என மற்றவ்ர்க்கே
கவனமுடன் இட வேண்டும் !
காட்சி மாறி நமக்கதுவே...
கலக்கமதை சேர்த்திடலாம் !
பதவிக்கென பலபேர்கள்...
பலவிதமாய் நடிப்பாரே !
உதவிஎனும் பெயரினிலே
இயக்கமாக இடுவாரே !
முதலமைச்சர் ஆனவுடன்
முதலாவ தாகத் தான்
எதில் இடுவோம் என்றிங்கே
கனவெல்லாம் காண்பாரே !
அருமையான கவி!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ! நன்றிகள் !
Deleteநன்றி நண்பரே! எழுதுவதை குறைத்துக் கொள்ளலாம் என்றிருந்த வேளையில் உங்களது ஊக்கமான கவிதை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா !
Deleteநல்ல முயற்சி வாழ்த்துகள்...புதுகை வலைப்பதிவர் விழாக்குழுவினர் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! தொடர்ந்து வரவும் !
Deleteகையெழுத்துப் பற்றிய பா அருமை,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ! தொடர்ந்து வரவும் !
Delete