.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, September 29, 2015

ஆணி வேர் !

பதிவர் திருவிழாவையொட்டி நடக்கும் 'பண்பாடு' பற்றிய புதுக்கவிதை போட்டிக்கு நான் பதிவு செய்த கவிதை:
இங்கே
அதே கருத்துக்களை மரபுக் கவிதை வடிவில் பதிவு செய்துள்ளேன்...படியுங்கள்...கருத்துக்களை பகிருங்கள்...
--------------------------

புதுயுக வாழ்க்கை தன்னில்
   பழையதாம் பண்பா டெல்லாம்
எதுக்குத்தான் உதவும் என்று
    எகத்தாளக் கேள்வி உண்டு !
மரமது வளர்ந்தபின் கூட...
    மண்ணிலே ஆணிவேர் தேவை!
மனமதில் வைத்திடு இதையே !
    பண்பாடே வாழ்வின் வேராம் !

அன்புடன் நேயம் என்னும்
    அருமையாய் நெறிகள் சொல்லும்
பண்புடன் மனிதம் வாழ...
    பண்பாடு வழிகள் சொல்லும் !
முன்புநாள் சோற்றில் தானே
    முத்தான சத்தும் உண்டு !
அன்றுநம் முன்னோர் செய்த‌
   அமுதமே பண்பா டாகும் !

பழக்கமே ஆளை ஆக்கும் !
    பழக்கமே ஆளை வார்க்கும்!
வழக்கமாய் செய்யும் முறையே
     பண்பாடு சொல்லிக் காட்டும் !
புழுக்கத்தில் தென்றல் போல...
     புத்துணர் எண்ணம் கூட்டும் !
புழக்கத்தில் வைப்பாய் அதையே!
     பெருமைகள் பெரிதாய்ச் சேரும் !

4 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வெற்றி பெற,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates