
மேலைநாட்டு மேகம் கொஞ்சம்
நம்ம ஊரு பக்கம் வந்து
"மாரி" யாக மாறி இங்கேப்
பெய்ததினால...
அந்த ஊரில் மேகம் அது
முகர்ந்து வந்த மண்ணின் மணம்...
நம்ம ஊரு மண்ணுக்குள்ளும்
கலந்ததினால...
சுத்தமாக மறந்து போச்சு
சுத்தமான நம் பண்பாடு !
சத்தமாக உரக்கச் சொன்னா
சூழும் பெரும் பாடு !
வந்தவரை உபசரிச்சு
விருந்து படைப்பதும்...கடன்
தந்தவரை தெய்வமெனத்
தொழுது நிற்பதும்...
நம்ம ஊரு பழக்கமுங்க...
மறந்திடலாமா? இதுபோல்
நம்ம ஊரு அடை யாளமெல்லாம்
மறைந்திடலாமா?
அந்த ஊரு மேகம் அது
திரும்பிப் போகட்டும் !
நம்ம ஊரு பழக்கம்...பண்..பாடு எல்லாம்
நம்மோடே இருக்கட்டும் !
உறுதிமொழி:
1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்
2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
கவிதை அருமையாக உள்ளது வாழ்த்து.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்ந்த வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றி ரூபன் !
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்
http://www.ypvnpubs.com/
மிக்க நன்றி ஐயா !
Deleteஅருமை
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா !
Deleteநன்றிகள் தனபாலன் ஐயா !
ReplyDeleteஅருமை!! வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கும், விழா அமைப்புக்கும் குழுவினருக்கு நன்றி !
Deleteவணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதை அழகு அருமை
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்களு நன்றி!!
தங்கள் வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! தொடர்ந்து வரவும் !
Delete