.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, June 18, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 54



"நானும், அதோ போறானே பாண்டி...அவனும் சின்ன வயசில ஒரே தெருவுல பால் பாக்கெட் போட்டோம்...!"

"அப்படியா...பா(Pa)ல்ய சினேகிதன்-னு சொல்லுங்க !"



"நம்ம ஏட்டு ஏகாம்பரம் திடீர்-ன்னு சாமியார் ஆயிட்டாராமே !"

"போலி சாமியாரா? இல்ல போலிஸ் சாமியாரா?"

"!!!"

"ஏங்க க்ளாஸ்-க்கு போயிருக்கிற பொண்ணுக்கு ஃபோன் பண்ணி வரும்போது ஆயில் வாங்கிட்டு வரச் சொல்லாம...வீட்டுல இருக்கிற பையனை அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்றீங்க?"

"நீ கேட்டது 'சன்' - ஆயில் ஆச்சே !"

Saturday, June 10, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 53


"என்னங்க ஸ்பெஷன் சிக்கன் பிரியாணி 150 ரூபாய்-ன்னு வாங்கினா, அதில சிக்கனையும் காணும்...அளவும் கம்மியாத்தான் இருக்கு..."

"அது ஸ்பெஷல் சிக்கன பிரியாணி-யாம்...!"



"டெக்னாலஜி தெரியாதவர்கிட்ட வழி கேட்டது தப்பா போச்சு !"

"என்னாச்சு?"

"ஆப்பிள் ஸ்டோர்ஸ் இந்த ஏரியாவுல எங்க இருக்குன்னு கேட்டா, பக்கத்தில இருக்கிற பழக் கடையக் காட்டறாரே !"

"!!!!"



"எப்ப டாஸ் போட்டாலும் அவன் 'ஹெட்ஸ்" தான் சொல்லுவான்-ன்னு உனக்கு எப்படிடா தெரியும்?"

"ஏன்னா அவன் 'தல' யோட தீவிர ரசிகனாச்சே !"

Sunday, June 4, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 52




"உங்க அபார்ட்மெண்ட்ல செக்யூரிட்டி த்ரெட் இருக்குன்னு சொல்ற...ஆனா...காவலுக்கு இருந்த ஒரு செக்யூரிட்டியையும் வேலையிலேர்ந்து நீக்கிட்டீங்களே! ஏன்?"

"செக்யூரிட்டியால த்ரெட்-ன்னு சொல்லிதான்...!"



"சின்ன வயசிலயே நெடுஞ்சாலைகளில் உள்ள பை-பாஸ் எல்லாம் பஸ் ஒட்டின நம்ம பரந்தாமன், இப்போ டாக்டரா இருக்காரு..."

"என்ன டாக்டர்"

"பை பாஸ் சர்ஜன்...!"




"சுட்டு போட்டாலும் உனக்கு டான்ஸ் வராதுன்னு எங்க அம்மா சொன்னது சரிதான் போலிருக்கு...!"

"எப்படி சொல்ற?"

"தீமிச்ச காலோட டான்ஸ் க்ளாஸ் போனேன்... கால கீழயே வைக்க முடியலையே !"

"???"

Friday, June 2, 2017

இசையே ! வாழ்க !



இசைக்கொரு உருவம் தரவே
 விரும்பினன் நான்முகன் ப்ரம்மா !
தசையோடு ரத்தம் எல்லாம்
  சுருதியும், லயமும் கூட்டி..
அவ்வுரு தன்னைக் கருவாய்
   சுமந்தது இசையின் அம்மா !

கலைமகள் என்னும் வாணி !
   கலைகளின் அதிபதி ராணி !
அலைகடல் புவியின் வாழ்வில்
   அமைதியில் மனதைக் கட்டும்
இசைக்கடல் வேண்டும் என்றே
   திறனெல்லாம் அவ்வுருக்கே தந்தாள் !

வயல்வெளிப் பாடல் எல்லாம்
   திரையிலேத் தேனாய் கேட்க..
அயற்சிகள் நீக்கும் புதிய‌
    அரும்பெரும் மருந்தாய் ஒன்றை
மருத்துவம் கண்டது இங்கே !
   மகத்துவம் என்னே சொல்வேன் !

விருதுகள் இவனிடம் வந்தால்
  வேகமாய் பெருமை கொள்ளும் !
சுருதிகள் இவன்கை பட்டால்...
  கிருதியாய் தேனை வார்க்கும் !
அரியதோர் பிறவியாம் ராசா !
   மனதிலே பூத்திடும் ரோசா !

ஆயிரம் ஆயிரம் ஆண்டு
   அவனியில் அவனும் வாழ்ந்து
ஆயிரம் கோடி பேரின்
   இதயத்தை இசையால் ஆண்டு
சாதனை மேலும் செய்ய‌
   சரஸ்வதி அருளும் செய்வாள் !

பிரியமுடன்...
பி.பிரசாத், 

Saturday, May 27, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 51

பயில்வானின் ரகசியம் !


 

"நம்ம பயில்வான் கதிரவனோட ஆற்றலின் ரகசியம் என்ன-ன்னு நினைக்கிறீங்க?"

"கதிரவன் ஆச்சே - சோலார் எனர்ஜி தான் !"

"???"



கத்தும் குட்டி !



"அந்தக் குட்டிப் பையன் சைக்கிள் ஓட்ட வரலை-ன்னு ஏன் இப்படி கத்தறான்?"

"அவன் ஒரு 'கத்து' குட்டி !"

"!!!"

சின்னதா?


"சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிசா கவலை பட்க்கூடாது-ன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சுன்னு சொல்றியே...ஏன்?"

"இப்ப நம்ம சின்னத்தை முடக்கிட்டாங்களே !"

"!!!"

Saturday, May 20, 2017

பாகுபலியும் பரோட்டா புலியும்...


"பாகுபலி படம் பார்த்த பின்புதான் அரசன் பாகுபலி எவ்வளவு பலசாலி என்பதே எனக்குத் தெரிந்தது அமைச்சரே !" - பாகுபலியின் அண்டை நாட்டு  மன்னன் சிங்கம்புலி ஆச்சர்யத்தில் இருந்தான்.

"எனக்குந்தான் மன்னா...! இவ்வளவு பலசாலியான ஒரு அரசன் நம் அண்டை நாட்டை ஆள்வதால், எந்த நேரமும் நம் மீது போர் தொடுக்கலாம்...ஆகையால்..." - இழுத்தார் அமைச்சர்.

"படம் பார்த்த பின்பு எனக்கும் அந்த கிலி வந்துவிட்டது அமைச்சரே...! பாகுபலிக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது என்பது எனக்கு உடனே தெரியவேண்டும்...அவன் என்ன செய்கிறான்..என்ன சாப்பிடுகிறான் என்ற விவரங்களை எனக்கு சீக்கிரம் சேர்த்து வந்து கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே !"

"உத்தரவு மன்னா...!"

"மன்னா...ஒரு நிமிடம்...இந்த விஷயத்தில் நீங்கள் அவசரப் படவேண்டாம்" - வழக்கம்போல் அறிவுறுத்தத் தொடங்கினார் அரசவையின் மூத்த குரு...ஆனால் அரசன் அவரை சட்டை செய்யவில்லை.

பாகுபலியின் திரைப்படம், அவனது நாட்டை விட பக்கத்து நாடுகளில் பெரும் 'ஹிட்' - பாகுபலியின் வீர்த்தையும், பலத்தையும் திரையில் பார்த்து அவரவர் பேசி ஆச்சர்யமடைந்து கொண்டிருந்தனர்.

மறுநாள்...

"அமைச்சரே ! பாகுபலியின் பலத்திற்கான ரகசியம் தெரிந்ததா?"

"இல்லை மன்னா...நம் ஆட்களை அங்குமிங்கும் அனுப்பியுள்ளேன்...அவர்கள் விரைவில் தகவல் சேகரித்து வருவார்கள் மன்னா..."

"சீக்கரம் ஆகட்டும்...நானும் பாகுபலிக்கு இணையான பலமும் வீரமும் கொண்டவனாய் ஆக வேண்டும்...இந்த சிங்கம்புலி அந்த பாகுபலிக்கு எந்த அளவிலும் குறைந்தவனில்லை என்று ஊரே போற்ற வேண்டும்..."

"ஆகட்டும் மன்னா!"

வெயில் தணியும் மாலை வேளை....ஸ்மார்ட் ஃபோனை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார் அமைச்சர். Facebook-ல் ஒரு வீடியோ தென்பட்டது - அந்த வீடியோவை முழுதும் பார்த்த அமைச்சரின் முகம் மலர்ந்தது.  நேரே மன்னரிடம் ஓடி "மன்னா...பாகுபலியின் வீரத்திற்கான ரகசியம் தெரிந்து விட்டது. ..அவனது உடலுக்கு வலு சேர்க்கும் உணவு, நம் நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த வீடியோவைப் பாருங்கள் !"

வீடியோவை - ப்ளே செய்கிறார் அமைச்சர். அதில்...

பாகுபலி பறந்து அடிக்கும் அனல் பறக்கும் காட்சி...காட்சி முடிந்ததும் ஒரு நிருபர் ஓடி வந்து...'பாகுபலி மன்னா...உங்கள் வீரம், பலத்தின் ரகசியம் என்ன?" - அதற்கு பாகுபலி சொல்லும் பதிலைக் கண்டதும் மன்னனுக்கும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அப்படி என்ன சொன்னான் பாகுபலி?

"எனது உடல் வலிமைக்குக் காரணம் அண்டை நாட்டில் தயாரிக்கப்படும் 'பரோட்டா புலி' கடை பரோட்டா...!...

தொடர்ந்து காட்சியைப் பார்க்காமல் 'கட்' செய்தார் அமைச்சர். "மன்னா தங்களின் ஐயம் தீர்க்கும் பதில் கிடைத்து விட்டது. நம் நாட்டு 'பரோட்டா புலி' கடை 'பரோட்டா'தான் பாகுபலி பலத்தின் ரகசியம். வாருங்கள் இப்போதே அங்கே போகலாம்....

GPS ஆன் செய்து 'பரோட்டா புலி' கடையைத் தேடி புறப்பட்டான் மன்னன் சிங்கம்புலி...

தன் கடைக்கு மன்னன் படை சூழ வருவதைக் கண்டு 'பரோட்டா' மாஸ்டர் கொஞ்சம் பயந்து விட்டான். அவன் சுதாரிப்பதற்குள் மன்னன் சிங்கம்புலி அவனருகில் வந்துவிட்டான்.

"பரோட்டா மாஸ்டர்...உங்கள் கடை பரோட்டா-தான் பக்கத்து நாட்டு பாகுபலியின் பலத்துக்கு காரணம் என்று அறிந்தோம். உங்கள் நாட்டு மன்னனான எனக்கும் அது வேண்டும். இன்று முதல் இரண்டு வேளையும் அரண்மனைக்கு 'டோர் டெலிவரி' செய்து விடுங்கள்...!"

என்ன நடக்கிறது என்பது பரோட்டா மாஸ்டருக்கு மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது....அவன் தைரியத்தை வரவைத்துக் கொண்டு சொன்னான்...

"மன்னா...மன்னிக்க வேண்டும்...பாகுபலி படத்தின் பாப்புலாரிட்டியை பயன்படுத்தி எனது கடைக்கு ஒரு விளம்பரம் செய்து தருவதாக 'டிஜிட்டல் மார்கெட்டிங்' செய்யும் என் தம்பி சொன்னான். நானும் சரி என்று சொன்னேன். அந்த விளம்பரம்தான் Facebookல் நீங்கள் பார்த்தது. மன்னன் பாகுபலி-யின் பலத்துக்கு அதுதான் காரணமா எனக்குத் தெரியாது...ஆனால் எங்கள் கடையில் வீட் பரோட்டா போடுகிறோம்...தாங்கள் சாப்பிட்டு செல்ல வேண்டும்' என்று சொல்லி முடித்த மறுநிமிடம்...மன்னன் சிங்கம்புலிக்கு சிரிப்பதா கோபப்படுவதா எனத் தெரியவில்லை... மன்னன் அமைச்சரை பார்க்க, அமைச்சர் மூத்த குருவை பார்க்க...கருத்து சொல்ல இதுதான் சாக்கு என்று அவர் சொன்னார்..

"மன்னா...நான் அப்போதே சொன்னேனே...இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று...திரையில் காண்பதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடக்கூடாது - அதுவும் இந்த 'வைரல் வீடியோ' உலகத்தில்...மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்..."

மன்னன் 'வீட் பரோட்டா' டேஸ்ட் செய்து விட்டு, வீட்டுக்குத் திரும்பினான்...!

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates