.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, July 15, 2020

மௌனம் கலைக்கும் நேரம்


தெய்வம் எல்லாம் இன்று... மௌனம் ஆனது ! தெய்வம் எல்லாம் இன்று மௌனம் ஆனது ! மனித குலம் அழிக்கும் கிருமி அதன் ஆட்டம்...அடக்காமலே... கண்டும் காணாது...கேட்டும் கேளாது... (தெய்வம் எல்லாம்) தோல் வண்ணம் பார்த்தேதான் நோய் தாக்குமா? ஆ...ஆ.... தோல் வண்ணம் பார்த்தேதான் நோய் தாக்குமா? - இந்த ஆள் வெள்ளை இவன் கருப்பன் எனபார்க்குமா? மாந்தர்க் குள்ளே பேதம் இல்லை பாடம் உண்டாச்சு... வேந்தன் என்ன வறியோன் என்ன ஒண்ணே கண்டாச்சு... பாடம் சொல்ல...வந்த வினையோ? இதை உணர்ந் தோமே..உள்ளம் தெளிந்தோமே தெய்வங்களே ! இன்னும் ஏன்மௌனம்? காக்க இது தருணம் ! (தெய்வம் எல்லாம்) சம்பந்தர் பதிகத்தில் பிணி தீர்ந்தது ... ஆ...ஆ.. சம்பந்தர் பதிகத்தில் பிணி தீர்ந்தது ... ஆதி சங்கரர் பாடலில் பொன் சேர்ந்தது ! அதுபோல் பாடி அருளைக் கேட்க யாருமில்லையோ ! கடவுள் எல்லாம் அடமாய் இருந்தால் அகிலமில்லையே ! போதும் கொடுமை..இல்லை பொறுமை.. பதில் சொல்வீரோ? அணைத்துக் கொள்வீரோ? தெய்வங்களே ! இன்னும் ஏன்மௌனம்? காக்க இது தருணம் ! (தெய்வம் எல்லாம்)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates