.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, April 26, 2021

தடுப்பூசி ஜோக்ஸ்

 #கடி ஜோக்ஸ் - பாகம் - 94

மாஸ்க் விரிய Smile Please !




"கடைசியா ஒரு ஹிந்தி படம் பார்க்கும்போது த்யேட்டர்ல சந்திச்சவங்க...இப்ப மறுபடியும் தடுப்பூசி திருவிழாவில் சந்திக்கிறாங்களாம். இத வெச்சு அந்த ஹிந்தி படம் பேர் சொல்லுங்க பார்ப்போம் !"

"ம்ம்ம்ம்ம்ம்ம்...தெரியலையே !"

"JAB வி மெட்"

******************************

"ஏங்க பெரியவரே ! உங்க வயசுக்கெல்லாம் முதல்லய தடுப்பூசி போட ஆரம்பிச்சிட்டாங்களே ! இவ்வளவு லேட்டா வந்ததோட இல்லாம கையில போடற ஊசிக்கு கால் டவுசரை வேற விலக்கிட்டு இருக்கீங்க?"

"வீட்டுலதான் 'பின்னால' போட்டுக்கலாம், 'பின்னால' போட்டுக்கலாம்ன்னு சொன்னாங்க !" 

*******************

DAY OF DOSES

"இன்னிக்கு ஆபிஸ்ல பாஸ் கிட்ட நல்லா ஒரு டோஸ் வாங்கிகிட்டேன். அப்படியே ஆஸ்பத்திரி போனா...அங்க நர்ஸ்-கிட்ட ஒரு டோஸ் வாங்கிகிட்டேன் !"

"நர்ஸ்கிட்ட திட்டு வாங்கினீங்களா?"

"இல்ல...முதல் டோஸ் தடுப்பூசி போட்டுகிட்டேன் !"

************************

"இந்த வயசிலயும் எனக்கு ஒரு சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்குன்னு பெரிசு ரொம்ப அலட்டிக்குதே ! அப்படி என்ன முதியோர் மாரத்தான்ல ஓடிச்சா?"

"அட நீங்க வேற ! அது தடுப்பூசி போட்டுகிட்டதுக்கான சர்ட்டிபிகேட்...!"

*********************

"அந்த தடுப்பூசி திருவிழாவில  ஏன் ஓடிப் புடிச்சி விளையாடறாங்க?"

"அட நீங்க வேற ! ரிஜிஸ்டர் பண்ணிகிட்டு ஊசி போட்டுக்க வந்தவரு...நர்ஸ் ஊசியை எடுத்த உடனே பயந்து ஓடறாரு ! நர்சும் பின்னாடியே ஓடறாங்க !"

???

**************************

"ஊசி கையிலதான போடப் போறேன். ஏன் மாஸ்க்-கை கழட்டறீங்க?"

"ஆன்னு சத்தம் போடத்தான்..."

"???"

For more jokes, poems and stories, please visit  

https://psdprasad-tamil.blogspot.com 

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates