"யோக சாஸ்திரம்" படைத்த பதஞ்சலி முனிவரின் வாழ்க்கை பற்றிய வரலாற்றுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிடைக்கப்பெறவில்லை. அவரது பங்களிப்பு, யோக சாஸ்திரம் தவிர ஆயுர்வேதத்திலும், நாட்டியக் கலையிலும் இருந்ததாகக் கருதப்படுகிறது, ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் மஹரிஷி பல அரிய சக்திகளைக் கொண்டிருந்ததாகவும், திருப்பட்டூரில் ஜீவ சமாதி கொண்டதாகவும் நம்பப்படுகிறது. அவருக்கு ஒரு பாமாலை :
பாடலாசிரியர்: ஸ்ரீதேவிபிரசாத்
ராகம்: சக்ரவாகம்
****************************
அவதார புருஷராய் அவனிக்கு வந்தார் !
சிவன், விஷ்ணு அருளோடு நலம்புரிய வந்தார் !
தவ ஞான மஹரிஷியாம் பதஞ்சலியாய் வந்தார் !
தேகநலன் பேணுகின்ற வழிகளதைத் தந்தார் !
கோரஸ்:
நாக உடல், நரனின் தலை கொண்ட விசேஷன் !
யோகக் கலை எழுத வந்த ஸ்ரீ ஆதிசேஷன் !
---
மனித உடல் அறிவியலை அறிந்திருந்த ஞானி !
புனிதர் அவர் வரலாறு அறியவில்லை பூமி !
ஆயுர்வேத மருந்தியலில் அவரே முன்னோடி !
காலம் அவர் மகிமையினைக் காட்டும் கண்ணாடி !
காலம் அவர் மகிமையினைக் காட்டும் கண்ணாடி !
கோரஸ்:
நாக உடல், நரனின் தலை கொண்ட விசேஷன் !
யோகக் கலை எழுத வந்த ஸ்ரீ ஆதிசேஷன் !
(அவதார)
ஆடல்கலை போற்ற வந்த நடராஜர் ரூபம் !
ஆசனங்கள் செய்யும் முறை அவரளித்த வேதம் !
திருப்பட்டூர் சன்னதியில் செய்திடுவார் தியானம் !
அவர்புகழை உலகறிய பாடிடுவோம் கானம் !
அவர்புகழை உலகறிய பாடிடுவோம் கானம் !
கோரஸ்:
நாக உடல், நரனின் தலை கொண்ட விசேஷன் !
யோகக் கலை எழுத வந்த ஸ்ரீ ஆதிசேஷன் !
(அவதார)
அருமை...
ReplyDelete