இது என்ன 'விசா'ரணை?
"நம்ம தலைவரு, 'விசா' இல்லாம வெளிநாடு பயணம் போறார்ன்னு கேள்விப்பட்டேன்...அது எப்படிங்க?"
"அட நீங்க வேற...! அவரு ரெண்டாவது சம்சாரம் 'விசாலம்மா'வைக் கூட்டிகிட்டு போகலைங்கிறது தான் அப்படி சொல்றாங்க...!"
"???"
'ரூம்..ரூம்...'
"நம்ம தலைவரை அவங்க வீட்டுல ஒரு 'ரூம்'ல அடைச்சு வெச்சிருக்கிறாங்களாமே...! அந்த 'ரூமை' விட்டு வெளியே வரமுடியாதுன்னு சொல்றாங்க...!"
"அதெல்லாம் வெறும் 'ரூமர்'-ங்க...!"
"!!!!"
கனவு பலிக்குமா?
"முதலமைச்சர் ஆகிற தன்னோட கனவு பலிக்காத மாதிரி, நம்ம தலைவரு நேத்து கனவு கண்டாராம்...ரொம்ப அப்சட்...!"
"அவரு நேத்து கண்ட கனவு பலிச்சிடுமே !...எதுக்கு அப்சட்டு?"
"!!!!"
குதிரை சவாரி
"குதிரை பேரத்தில வந்த காசுல தலைவரு, தன்னோட பேரனுக்கு குதிரை வாங்கிக் கொடுத்தாராம்...!"
"யாரோட சவாரி போக...?"
"கொள்ளுப் பாட்டியோட தான்...!"
மிகவும் நன்றாக இருக்கிறது
ReplyDeleteகனவு... அனைத்தும் கனவு தான்...
ReplyDeleteblogspot.com மாற்றியதற்கு நன்றி...
ReplyDeletetm +1