மகுடி வித்வான் !
"அந்த நாதஸ்வர வித்வான், தன்னோட காதலி ஞாபகம் வந்தா மகுடி வாசிப்பாராமே!!! ஏன்?"
"காதலி பேரு 'நாக' லட்சுமி ஆச்சே !"
சவுண்டு பார்ட்டி !
அந்த சேனல்ல இரைச்சலா பேசி நாட்டு நடப்பு ப்ரோக்ராம் பண்ணுவாரே...அவர் ஏதோ படத்துல நடிக்கிறாராமே...என்ன படம்?
'கத்தி' சண்டை...!
ரவுண்டு பார்ட்டி !
ஏற்கனவே குண்டா இருந்த காமெடி நடிகர் காங்கேயம், பட வாய்ப்பு இல்லாம ஒரு வருஷம் இருந்ததுல...இன்னும் குண்டாயிட்டாரே...!
அவரு, 'இன்னும் ஒரு ரவுண்டு வருவேன்'-னு சொன்னாரே...அதான்...!
வள்ளல் மன்னன் !
"மன்னர் ஜாகிங் போகும் போது இளநீர் குடித்துவிட்டு 20 ரூபாய்க்கு, 500 ரூபாய் கொடுத்துவிட்டுப் போறாரே ! எவ்வளவு பெரிய வள்ளல் நம்ம மன்னர்?"
"அட நீ வேற..! இளநீர்காரன் 'சேஞ்ஜ்' தர முடியாது'ன்னு சொல்லிட்டானாம்...!"
அருமையான பகிர்வு
ReplyDelete