.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, November 13, 2015

காதலா...கூ(ந்)தலா?



"பொண்ணுங்கன்னா, தலை முடி நிறைய்ய இருக்கணும்டா ! அந்தக் கூந்தல் அப்படியே பின்னழகு தாண்டி நீளமா இருக்கணும். அத மாதிரி ஒரு பொண்ணத் தான்டா மச்சான் நான் காதலிப்பேன்..." - இது வாசு...

"ஏன்...நல்லாத் தானே இருந்த? என்னாச்சு? இப்படி ஆயிட்ட?" - இது கோபால்...

"கூந்தலுக்கு வாசம் உண்டுன்னு  கேள்வி பட்டு இருக்கியா? நீண்ட கூந்தல்...அதுல அப்படியே தொலஞ்சு போயி அந்த வாசத்த...விடுடா மச்சான்...உனக்கு அதெல்லாம் புரியாதுடா..."

"டேய்...நெசமாத்தான் பேசறியா? பொண்ணு பார்க்க அழகாயில்லைன்னாலும், கூந்தல் நீளமா இருந்தா லவ் பண்ணுவியா?"

"கண்டிப்பாடா..அழகுன்னா...நீளமா கூந்தல்...அவ்ளோதான்..."

"சரிடா மச்சி...உனக்கு என்னவோ ஆயிடுச்சு ! இன்னிக்கு நம்ம குமார் வீட்டு ரிசப்ஷன் இருக்கு. ஈவ்னிங் எத்தனை மணிக்கு போகலாம்? அப்படியே அந்த கல்யாண கூட்டத்திலே யாராவது நீளமா கூந்தலோட இருக்கங்களான்னு பார்க்கலாம்..." என்று சொல்லிவிட்டு சிரித்தான் கோபால்....

மாலை 6:30 மணி...இருவரும் ரிசப்ஷனில்...கண்கள் மேய்ந்து கொண்டிருந்தன...


அப்போது நடு வரிசையில், சுவர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் நீள் கூந்தல் வாசுவின் கண்ணில் பட்டது. அந்தப் பெண்ணின் கூந்தல் நாற்காலியிலிருந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. அவளது பின் புறத்திலிருந்து பார்த்ததால் நன்றாகத் தெரிந்தது..."மச்சான்...உன் வாய்க்கு சர்க்கரைடா... நான் தேடற ஆள் கிடைச்சாச்சு வா... "  பேசிக்கொண்டே அவள் அமர்ந்திருந்த நாற்காலி நோக்கி நடந்தான் வாசு.

அவள் அருகில் சென்று முகத்தை பார்த்தவுடன்..."அட..இவளா..." என முணுமுணுத்தான்...அவளும், "ஹாய்..! நீ வாசுதானே !" என்றாள்...

"ஹாய்...நீ காவ்யா?"

"ஆமாம்...காவ்யாதான்...நீ இந்த ஊர்லதான் இன்னும் இருக்கியா? நான் சென்னையில இருக்கேன்..."

"ஓ ! அப்படியா...நான் இங்கதான்..அப்பாவோட பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்ணிகிட்டு இருக்கேன்...இது என் ப்ரெண்ட்..கோபால்..."

வாசுவும், காவ்யாவும் ஒன்னா படிச்சவங்க...பள்ளிக் கூட காலத்தில....பல வருஷங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்...காவ்யா...மிகவும் அழகாக இருந்தாள்...அவளது உடலழகும், சிரிப்பும், கூந்தலுடன் சேர்ந்து வாசுவை மிகவும் கவர்ந்தது. அங்கேயே ப்ரபோஸ் செய்யலாம் என்ற முடிவை எடுத்து விட்டான். அந்த நேரத்தில், யாரோ காவ்யாவிடம் பேச்சு கொடுத்து அவள் கவனத்தை திருப்பினாள்.

"சரி லக்குடா உனக்கு மச்சி...தெரிஞ்ச பொண்ணு...நீ கேட்ட மாதிரி நீளமா முடி...அழகோ அழகு வேற...ஓகே தானே !"

"இப்பவே ப்ரபோஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்டா மச்சான்...இப்ப பாரேன்..." - மெல்லிசைக் கச்சேரி மற்றும் கல்யாண கோலாகலத்தில், இவர்கள் பேசிக்கொண்டது, அவளுக்குக் காதில் விழ வாய்ப்பில்லை...

கொஞ்சம் வழிந்தவாறே வாசு மீண்டும் காவ்யாவிடம் நெருங்கினான்.

வாசு வருவதை கவனித்த காவ்யா, "ஹாய்...சாரி ! இது என் ஆன்ட்டி...அதுக்குள்ளே ஏதோ சொல்ல வந்தாங்க..."

"அது சரி...இவ்ளோ நேரமா நின்னுகிட்டு பேசிகிட்டு இருக்கேன். நீ எழுந்திருக்கவே மாட்டேங்கற?" - உரிமை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டான் வாசு...

"சாரி வாசு...ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடண்ட்...என் கால்..." என்று அவள் முடிப்பதற்குள் வாசுவுக்கு நிலைமை புரிந்தது....அவன் மனதில் 'பக்' என்றது...

"சாரி காவ்யா...வெரி சாரி." - வாசு சொல்லி முடிக்கும் நேரத்தில் அவனது மொபல் சிணுங்கியது...மொபைலை  'அட்டண்ட்' செய்து அவன் அங்கிருந்து நகர்ந்தான்...கோபாலும் தொடர்ந்தான்...'கால்' முடிந்தவுடன், வாசு சொன்னான்..

"வாடா மச்சான்...சாப்பிடப் போகலாம்..."

"மச்சி...காவ்யா?"

"பாவம்டா அவ...விடுடா..."

"என்னடா சொல்ற? விடுடாவா?"

"கால் போன பொண்ணுடா..கூந்தல ஓகே...அவ மேல எனக்குக் காதல் வரலடா...பரிதாபம்தான் வருது..."

கோபால் அப்படியே ஷாக் ஆயிட்டான்..!

7 comments:

  1. Replies
    1. அப்பாவி பொண்ணுங்க நிலைமை...அடப்பாவியால...

      Delete
  2. வணக்கம்
    அண்ணா
    நகைச் சுவை உணர்வுடன் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நானும் ஷாக் ஆகிட்டேன்! கண்டதும் காதல் இந்த வகையில்தான் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் சுரேஷ் ! நன்றி..!

      Delete
  4. சிந்திக்கச் சிறந்த பதிவு

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates