.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, November 17, 2015

மழை - பல பார்வைகள்


எல்லா நிகழ்வுக்கும் உள்ளது போல, சமீபத்திய மழைக்கும் அவரவர் கருத்துக்கள் இருந்தன...ஒரு நிருபராகி,  "இந்த மழை பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று பல தரப்பு மக்களிடம் கேட்டால் என்ன பதில் வரும்...படியுங்கள்...





மாணவன்: இந்த மாதிரி மழை பேஞ்சா ஜாலி...ஸ்கூல் லீவு...(பதில் சொன்ன பள்ளிக் கூட சிறுவன் வீட்டுக்குள்ளும் தண்ணீராம் !)

அப்பா: கடைசியா, நாங்க கேரளா போனபோது என் பையன் "போட்டிங்" போகணும்னு சொன்னான். நாங்க போன ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ஒரு "போட்" கவிழ்ந்து  விபத்து நடந்ததா கேள்விபட்டிருந்தோம். அதனால..."போட்டிங்" போகல...அந்த குறை இப்ப இந்த மழையால தீர்ந்துச்சு ! என் பையன் வீட்டுக்கு பால் வாங்கவே போட்லதான் போயிட்டு வர்றான்...!

அம்மா: இந்த பிள்ளைங்கள வீட்டுல வெச்சுகிட்டு முடியல...காய்கறி விலை ஏறிடுச்சு ! ஆர்டர் பண்ணி சாப்பிடலாமுன்னா டெலிவரி இல்லன்னு சொல்றாங்க...!

பக்கத்து வீட்டு மாமி: மழையினால எதுக்கு கரெண்ட் கட் பண்றங்கன்னு தெரியல..மூணு நாளா, சீரியலே பார்க்க முடியல...!

எதிர்கட்சி அரசியல்வாதி: இந்த மழைக்கு காரணம் ஆளும் கட்சிதான்...! இலவச மிக்சி கொடுப்பதற்கு பதில் இலவச குடை கொடுத்திருந்தால், மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச குடை, ரெயின் கோட் வழங்கு திட்டத்தை நிறைவேற்றுவோம் !

ஆளும் கட்சி அரசியல்வாதி: மக்களுக்கு நல்லது செய்யும் வகையில், மழைக் காலத்தில், நமது அரசு நகரத்துக்குள்ளேயே  "படகு" வசதி செய்து தந்துள்ளது. ஊரெங்கும் தண்ணீர் இருந்தாலும், "தண்ணி"க் கடைகளை மூடாமல் நடத்துவதும் நாங்கள்தான்...!

நாலும் தெரிந்த வாட்ஸ் அப் க்ரூப்: நாங்க அப்பவே சொன்னோம். ஏரிகள் எல்லாம் வீடு கட்டினதுனாலதான் இந்த மழையின் பாதிப்பு அதிகமா இருக்கு. (க்ரூப் சொல்லாமல் சொன்னது: எங்க ஊரு ஏரி பக்கம் வீடு கட்டும் போதே நாங்க கேட்டோம்...அந்த இடத்தில எங்களுக்கும் பங்கு கொடுங்கன்னு...!)

முகநூலில் படம் போடுவோர்: சும்மா செல்fபி எடுத்து போட்டு போரா இருந்தது. இந்த மழையால தண்ணீர் தேங்கியிருக்குற இடம் நிறைய கிடைச்சுது போட்டோ எடுக்க...எதிர்ப்புறமா ஒருத்தங்க தண்ணீர்ல மூழ்கி "காப்பாத்துங்க!"ன்னு கத்தினாங்க..அத அப்படியே வீடியோ எடுத்து பேஸ்புக்ல போட்டேன். வைரல் ஆயிடுச்சு ! (அதுக்கு அவங்கள காப்பாத்திருக்க முயற்சி செஞ்சுருக்கலாமே !)

மருத்துவர்கள்: இந்த சீஸன் வழக்கத்தைவிட எங்களை ரொம்ப பிஸியா வெச்சிருக்கு...இப்போ யூட்யூப், பேஸ்புக்-லயே வைரல் ஆகிறதுனால...வைரல் ஜுரம்ன்னு சொன்னா மக்கள் புரிஞ்சுக்கிறாங்க...!

வானிலை ஆராய்ச்சி மையம்: நாங்க இருக்கிறதே இந்த சீஸன்லதான் மக்களுக்குத் தெரியுது. மீடியாவும் எங்கள பேட்டி எடுக்க வராங்க...அதனால மழையை நாங்க வரவேற்கிறோம் !

10 comments:

  1. காப்பாற்ற முயற்சி செய்வது - அந்த மனம் சீரழிந்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் டி.டி !

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

      Delete
  3. வணக்கம்
    அண்ணா
    படித்து மகிழ்ந்தேன்... தமிழ் நாட்டில்தான் மழை என்றால் தங்களின் வலைப்பூவை திறந்தாலும் மழைதான்.. ஹா..ஹா..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கருத்து மழையில் நனைய வைத்த ரூபனுக்கும் நன்றி !

      Delete
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates