விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பார்ப்பதற்கும்...
இயற்கை எழில்தன்னை அகத்துள்ளே சேர்ப்பதற்கும்...
திரிந்து செல்கையிலே பாதையினை அறிவதற்கும்..
இறைவன் நமக்களித்த சீதனமே இருவிழிகள் !
மண்ணில் கதைமுடித்து மண்ணோடு கலக்கும்முன்
என்னே ! இன்பங்கள் கண்ணாலே அடைகின்றோம் !
கண்ணால் நாம்பெற்ற இன்பமெலாம் கண்ணற்றுக்
கலங்கும் மற்றவர்கள் அடைந்திடவும் வேண்டாமோ?
தானம் பலவுண்டு, இருந்தாலும் நாமிங்கு...
கண்ணுற்ற காட்சியெலாம் கண்ணற்றோர் கண்டுணர...
வானம் தனைமுட்டும் புண்ணியமும் கைகூட...
தானம் எனஇரண்டு கண்களையும் தந்திடுவோம் !
தெய்வம் அதுதந்த விழியிரண்டை நீயிங்கே...
தானம் எனத்தந்தால் விழிபெற்றோன் இப்புவியில்..
உய்யும் வரைஉனையே தெய்வமெனப் போற்றிடுவான் !
ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான் !
தானம் செய்யுங்கள் ! கண்தானம் செய்யுங்கள் !
தரணி விட்டபின்னே தெய்வம்போல் உய்யுங்கள் !
ஊனம் உள்ளோர்க்கு உளமார உதவுங்கள் !
அவர்தம் வாழ்வினிலே வெளிச்சம் காட்டுங்கள் !

வணக்கம்
ReplyDeleteஅண்ணா
ஒவ்வொரு வரிகளும் மிகவு அருமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் ரசித்திருப்பீர்கள் போல...! உங்கள் வரிகளில் தெரிகிறது...! மிக்க நன்றி ரூபன் !
Delete// ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான்.. //
ReplyDeleteஉண்மை... உண்மை...
நன்றிகள் தனபாலன் சார் !
Delete