காட்சி - 1 -படிக்க இங்கே சொடுக்கவும்
காட்சி - 2 இடம்: பூலோகத்தில் "கணிணி மாமா" வீடு
அப்பா: தேவதாஸ்...! ஏ..! தேவதாஸ் ! ஏன்டா...இங்கதான இருக்க...ஏன்-னு கேட்டா என்னடா?
தேவ்: அப்பா...! என்னப்பா இது பேரு...! தேவதாஸ்...பார்வதி-ன்னு...! ஊர்ல எல்லாரும் கூப்பிடற மாதிரி, நீங்களும் என்னை கம்ப்யூட்டர் மாமா-ன்னு கூப்பிடுங்க..! அப்பதான் பதில் சொல்வேன் ...
அப்பா: ஏன்டா...நீ என்ன எனக்கு மாமாவா?
தேவ்: அப்ப...கம்ப்யூட்டர் மவனே-ன்னு கூப்பிடுங்க...!
அப்பா: ஏன்டா...இன்னிக்கு ஏதோ வேலைக்கு இன்டர்வ்யூ வந்துதே...போகலியா?
தேவ்: இதெல்லாம் என்னப்பா வேலை...! என் ரேஞ்சுக்கு எடுத்த எடுப்புலியே பெரிய்ய...வேலைக்குத் தான் போவேன்...
அப்பா: ஓஹோ...இது வேறயா...!அப்ப உனக்கு இந்த ஜென்மத்தில வேலை கிடைக்காது...!
தேவ்: தேவையில்லப்பா ! எனக்கு இந்த கம்ப்யூட்டர் இருக்கு...இது எனக்கு சோறு போடும் ! இப்ப கூட பாரு...என்னென்ன பாவம் செஞ்சா என்னென்ன தண்டனை கிடைக்கும்-ன்னு சொல்ற ஒரு சாஃப்ட்வேர் பண்ணிகிட்டுயிருக்கேன்...! மவனுக்கு வேலை கிடைக்காது-ன்னு சொன்ன அப்பனுக்கு என்ன தண்டனை தெரியுமா? எண்ணெய் சட்டியில போட்டு வறுப்பாங்க...! ஹா...ஹா...!
(அப்பா முணுமுணுப்புடன் அங்கிருந்து நகர்கிறார் - பக்கத்து வீட்டுப் பையன் பாபு வருகிறான்)
பாபு: கம்ப்யூட்டர் மாமா ! எனக்கு இந்த பேப்பர்-ல பட்டம் செங்சு கொடுங்க மாமா !
தேவ்: என்னது பட்டமா...இங்க கொண்டா...(பேப்பரை வாங்கி படிக்கிறான்)
(தனக்குள்): ம்....இறப்போர் பட்டியல்...! என்னடா இது...! புதுசாயிருக்கு...! வாக்காளர் பட்டியல்தான் கேள்விப்பட்டிருக்கோம்...இது என்ன...! (படிக்கிறான்) 10-ம் தேதி - 10:16 மணிக்கு சாலை விபத்தில் இறப்பவர்கள்: சுஜாதா, கந்தசாமி, ஜோசஃப், இப்ராஹிம்,...10-ம் தேதி 10:17க்கு திருபுவனம் தங்கராசு...! என்னடா இது...! யாராவது கொலைகாரன் ப்ளான் போட்டிருக்கானா? ம்...புரியலயே ! எதுக்கும் இந்த பேப்பர் நம்மகிட்டயே இருக்கட்டும் !
(பாபுவிடம்): பாபு...! உனக்கு வேற பேப்பர்ல பட்டம் செஞ்சு தர்றேன் சரியா? ம்?
பாபு: சரி மாமா !
தேவ்: (பட்டம் செய்கிறான்)...இந்தா பட்டம்...கொஞ்சம் இரு...அதுல எம்.பி.பி.எஸ்-ன்னு எழுதித் தரேன்...சின்ன வயசிலயே டாக்டர் பட்டம் வாங்கினவன் நீதான்...! போய்ட்டு வா...!
பாபு: தாங்க்ஸ் மாமா !
-------------------------காட்சி முடிவு-------------- (தொடரும்...)

பறக்கப் போகிறவர்களின் பட்டியல் கையில்...! சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...
ReplyDeleteதங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !
Deleteபட்டங்கள்
ReplyDeleteதாளில் எழுதப்படுகிறதா
படிப்பால் பெறப்படுகிறதா
சிந்திக்க வேண்டியிருக்கிறதே!
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா ! தொடர்ந்து வரவும் !
Delete