ஆப்பிளுக்கும் கருப்புப்பன்னீர் திராட்சைக்கும்
நிறம் வேறு, உரு வேறு, சுவை வேறு !
ஆயினும் இரண்டுமே 'பழம்' தானே !
ஆப்பிரிக்க நாட்டினிலே இதுபோல
கருப்பரென சிவப்பரென மனிதரினை
அரசியிலின் ஆயுதத்தால் பிரித்துவைத்தார் !
கொடுமையிதை எதிர்த்துக்குரல் கொடுக்கவொரு
புரட்சிவீரன் போலவந்தார் மண்டேலா...
எழுச்சியுடன் கிளர்ச்சிகளை ஆக்கிடவே !
காரிருளாய் சூழ்ந்தவரின் வாழ்வினிலே
கருப்பரினச் சூரியனாய் ஒளிகொடுக்கத்
தலைவரெனத் தோன்றினாரே மண்டேலா !
சிறுபுத்தி சின்னவரின் சிறுசெயலால்...
சிறைவாசம் கொண்டுபலத் துன்பமுற்றார் !
ஆப்பிரிக்கக் காந்திஅந்த மண்டேலா !
விடுதலையும் பெற்றுத்தந்தார் நாட்டவர்க்கு!
பெருமைதந்தார் அமைதிக்கான நோபலுக்கு !
உலகமக்கள் மனங்கள்ஆண்ட மண்டேலா !
பேரிழப்பே மண்டேலாவின் உயிர்மறைவு !
அவர்கொள்கை கொள்ளவேண்டும் நாம்நினைவு!
மனிதருக்குள் நிறத்தினாலே ஏன்பிரிவு?
மனிதருள் மாணிக்கம்...
ReplyDeleteவரிகள் சிறப்பு...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நண்பரே !
Deleteகாரிருளாய் சூழ்ந்தவரின் வாழ்வினிலே
ReplyDeleteகருப்பரினச் சூரியனாய் ஒளிகொடுக்கத்
தலைவரெனத் தோன்றினாரே மண்டேலா !
சிறுபுத்தி சின்னவரின் சிறுசெயலால்...
சிறைவாசம் கொண்டுபலத் துன்பமுற்றார் !
ஆப்பிரிக்கக் காந்திஅந்த மண்டேலா !//
ஆழமான கருத்துடைய அற்புதமான வரிகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்