.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, November 26, 2013

கனியிருப்ப காய் கவராய் காற்றே !



தென்றலாய் வீசியே எங்கள்
   தேகங்கள் சிலிர்த்திடச் செய்வாய் !
என்றுமே இதமே தருவாய்
   தென்திசை காற்றே நீதான் !

மழைமிகு காலந் தன்னில்
   மனிதர்மேல் சீற்றம் கொண்டு
பிழைபல நட ந்தது போல‌
   புயலெனப் பாய்ந்தே வருவாய் !

புயலெனச் சீறும் போது
  பெரியதோர் சேதம் செய்வாய் !
வயல்வெளி, சாலை, மரங்கள்
   அனைத்தையும் அழித்தே செல்வாய்!

கீற்றிலே வீட்டை வேய்ந்து
   குடித்தனம் செய்வோர் தன்னை
சீற்றத்தில் சூறையும் யாடி
  வீதியில் நின்றிடச் செய்வாய்!

மண்சுவர் வீடுகள் இடித்து
   மனிதர்கள் உயிரைக் குடிப்பாய் !
கண்கவர் காட்சிகள் எல்லாம்
   கணத்திலே சிதைத்தே செல்வாய்!

வான்புகழ் வள்ளுவன் சொன்னான்
   வாய்ருசி கனிகள் இருக்க‌
ஏன்அந்த காய்கள் என்று.....
   நீயதை கேளாய் காற்றே !

மெல்லிய தென்றலாய் வீசு !
   வல்லிய புயலாய் வேண்டாம் !
சொல்லிய வார்த்தை கேட்டு
   செல்லமாய்த் தீண்டிடு காற்றே !

7 comments:

  1. Replies
    1. எனக்கு ஆதரவாக இயற்கையிடம் குரல் கொடுத்தமைக்கு நன்றி ...!

      Delete
  2. மெல்லிய தென்றலாய் வீசு !
    வல்லிய புயலாய் வேண்டாம் !///நல்ல வேண்டுகோள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  3. காற்றின் குணமேஅதுதானே,தென்றலும்,புயலுமாய் உருவெடுப்பதுதானே?எழுத்தின் குணமும் அதுதான் சூழல் பொறுத்து கருபொறுத்து அமைவதுதான் என நினைக்கிறேன்,நன்றி வணக்கம்/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  4. வள்ளுவனின் உவமையை
    பயன்படுத்திய நேர்த்தி மனம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates