சச்சினுக்கு சலாம் போடு ! சச்சினுக்கு சலாம் போடு ! மெச்சியவன் புகழைப் பாடு ! மேளதாளம் போட்டு ஆடு ! பந்துவீசும் வீரர்க் கெல்லாம் பட படப்பைத் தந்தவன் ! வந்து பார்க்கும் ரசிகருக்கு விருந்து படைத்துத் தந்தவன் ! பரம சிவன் நடனமதை பார்த்தது போல் பரவசம் ! திறமை யான டெண்டுல்கரின் ஆட்டம் கண்டு களிக்கையில் ! உச்சிவரை உயர்ந் திருக்கும் இமய மலை சிகரமும் சச்சினவன் சாத னைகள் நிமிர்ந்து பார்க்க வேண்டுமே ! களம் இறங்கும் போதுதன் நூறு சதம் தந்தவன் ! இளம் தலை முறைக்கெல்லாம் இறைவ னாகத் திகழ்பவன் ! சாத னையின் மனித உரு 'சச்சின்' என்று சொல்லலாம் ! வேத னையாய் இருக்கிறதே விடை பிரியும் போதுதான் ! நூறு நூறு நொறுக்கியவன் ! நாட்டின் பெயர் ஏற்றியவன் ! நூறு நூறு ஆண்டுவாழ நெஞ்சம் வாழ்த்திச் சொல்கிறேன் ! |
Saturday, November 16, 2013
சச்சினுக்கு சலாம் போடு !
Labels:
farewell,
poem,
prasad,
sachin,
salam sachin,
salute sachin,
tamil,
tendulkar,
tribute,
கவிதை,
சச்சின்,
டெண்டுல்கர்
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பிற்கு சிறப்பு...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
Deleteஎனக்கு கிரிக்கட் பற்றி ஆர்வமில்லை. அனுபவமுமில்லை...
ReplyDeleteஆயினும் உங்கள் கவிதையை
வரிக்கு வரி ரசித்தேன். மிக அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
மிக்க நன்றி ! தங்களது வாழ்த்து இன்னுமொரு முதற் பரிசு பெற்றதுபோல் உள்ளது !
DeleteIts too good.....i loved each and every poetic aspect of it.Prasad just tooo good
ReplyDeletethank you ! salam to you !
Delete