.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, December 25, 2018

சித்தப்பா - ரஜினி ரசிகர் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 87

ரஜினி ரசிகர் !

"உங்க சித்தப்பா ரஜினி ரசிகர்-ன்னு சொல்ற சரி. அதுக்கும் அவர் 2வது கல்யாணம் பண்ணிகிட்டதுக்கும் என்னடா சம்பந்தம்?"

"எனக்கு கெடச்சது சித்தி டூ பாயிண்ட் ஓ -வாச்சே !"

"???"

----------------

"நம்ம தலைவரே தேர்தலில் நம்ம கட்சிக்கு பெரிய தோல்வி-ன்னு ஒத்துகிட்டாராமே !"

"ஆமாம் - உணர்ச்சிவசப்பட்டு, தோல்வி-ன்னாலும் சின்ன தோல்வி இல்லை எங்களுக்கு...அதுவும் பெரிசுதான்-ன்னு அறிக்கை விட்டாராம் !"

"!!!"

------------------












Saturday, November 10, 2018

சுட்ட கதை !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 86


திருடின கதை !

"டைரக்டர் சார் ! உங்க அடுத்த படம் 'திருடின கதை'-ன்னு பேசிக்கிறாங்களே ! அப்படியா !"

"அட நீங்க வேற ! அவங்க பேசிக்கிறது படத்தோட கதையை பத்தி இல்ல...! 'திருடின கதை'-ங்கிறது படத்தோட டைட்டில்...."

"???"



----------------------------------------------------------


ஒரே ஸ்பார்க்



"அடுத்த படத்துக்கான கதை யோசிக்கிறப்போ நம்ம டைரக்டர் தாமஸ்-க்கும், டைரக்டர்  தீனா-வுக்கும் ஒரே ஸ்பார்க் ஆச்சாமே !"

"அப்படி என்ன தோணிச்சாம்?"

"ரொம்ப யோசிக்காம, ஒரு கொரியன் படத்தை சுட்டுடலாமு-ன்னுதான் !"

"!!!"


----------------------------------------------------------

நாவலைத் தழுவி


"என்ன சார் இது ? உங்க நாவலைத் தழுவி படம் எடுக்கலாமுன்னு உங்ககிட்ட பர்மிஷன் கேட்க வந்தா நீங்க வேற ஒரு கதாசிரியரைக் கேட்க சொல்றீங்க !"

"நான் எழுதின நாவலோட கதையே அவர்கிட்ட சுட்டது தான் ! ஹி...ஹி..!

"!!!


Sunday, October 21, 2018

பிடித்த‌ பாடல் வரி

#கடி ஜோக்ஸ் - பாகம் - 85

மீ டு !


 
"நேத்து நம்ம தலைவர் பேரு "மீ டு"-வுல வந்துதுல...இன்னிக்கு...நம்ம தலைவர் "மீ டு"ன்னு சொல்லிருக்காரு !"

"அவரை யாரு harass பண்ணினாங்களாம்?"

"அவர் மேல புகார் வந்தது தெரிஞ்ச அவங்க சம்சாரம்-தான் !"

------------




பிடித்த‌ பாடல் வரி




"அவருக்கு புடிச்ச சினிமாப் பாடல் வரி எதுன்னு கேட்டே அவர் சிலை கடத்தல்ல தொடர்பு உள்ளவர்ன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க?"

"அவருக்கு புடிச்ச வரியா அவரு... "பென்சிலை சீவிடும் பெண் சிலையே !"-ன்னு சொன்னாரே !"

"????"

-------------------

இதுவல்லவோ பயிற்சி !


"உங்க பையன் இந்த வயசுலேயே நல்லா பேட்மிட்டன் விளையாடறானே ! ஏதாவது பயிற்சி எடுத்துக்கறானா?"

"ஆமாம்...வீட்டுல கொசு பேட் வெச்சு கொசு அடிக்கிறானே...!"




"???"

 




Saturday, September 15, 2018

சிங்காரம் விளையாடிய GAME

#கடி ஜோக்ஸ் - பாகம் - 84

 

விளையாட்டுக்காரன் !


 
"அந்த சிலை கடத்தல் சிங்காரம், கைதாகும் போது தன் பிள்ளைகளோட விளையாடிகிட்டிருந்தானாம் !"

"அப்படியா! என்ன விளையாட்டு?"

" STATUE GAME  -தான் !"

"!!!"
=========================================================


தூக்கப் போறேன்...கண்ணைக் கட்டி...!



"உன்னோட காதலன சிலை திருட்டு வழக்குல கைது செஞ்சுட்டாங்களாமே !"

"நீ சிலை மாதிரி இருக்கே ! உன்னை ஒருநாள் சிலையைத் தூக்கற மாதிரி தூக்கிட்டுப் போறேன் பாரு..ன்னு அடிக்கடி அவரு சொல்லும்போதே எனக்கு கொஞ்சம் டவுட்-டுதான் !"

"!!!"

======================================================

பல கேஸா?


நீதிபதி: சின்னையன் ! பல கடத்தல் கேஸ்கள்ல உங்களுக்கு பங்கு இருக்குன்னு சொல்றாங்களே ! நீங்க ஒத்துக்கறீங்களா?"

திருடன்: இல்லீங்கய்யா ! சில கடத்தல் தான்யா செஞ்சுருக்கேன் !"


Sunday, July 29, 2018

காதுல கண் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 83

அம்மா சாப்பாடு 
 
"ஏன்டா ! அம்மா கையால சமைச்ச மாதிரி சாப்பாடு வாங்கி தர்றேன்-ன்னு சொல்லி இப்படி நான்-வெஜ்-ஆ சாப்பிட வெச்சுட்டியேடா...! எங்க அம்மா என்னிக்கிடா நான்-வெஜ் சமைச்சாங்க?"

"THAI FOOD  -ன்னு நான் சொன்னத நீ தப்பா புரிஞ்சுகிட்ட போல...!"

"???"


ப்ரேக்

 
"யோவ் ! அதான் வண்டி ப்ரேக் நல்லா புடிக்குதே ! அப்புறம் ஏன்யா அந்த பெரியவர் மேல கொண்டு வண்டிய விட்டுட்டு...'ப்ரேக் புடிக்கல'-ன்னு பொய் வேற சொல்ற?"

"ப்ரேக்க...நான் புடிக்கல-ன்னு சொன்னேங்க...!"

"!!!"



காதுல கண் !

 
"அதோ போறாரே ! அவருக்கு காதுல கூட கண் இருக்கு...சைடுல கூட பாப்பாருன்னு சொல்றியே ! காதுல எப்படி கண்ணு?"

"அவரு காதுல 'கடுக்கண்' போட்டிருக்காரே ! அதச் சொன்னேன் !"

"!!!"

Friday, June 8, 2018

டாக்டர் ஜோக்ஸ்


#கடி ஜோக்ஸ் - பாகம் - 82

நான்தான் டாக்டர்!

"நான் செஞ்சேன்! நான் தான் முதல்ல செஞ்சேன்...ன்னு இப்படி "நான் நான்'-ன்னு பேசி தன்னையே முன்னிறுத்திக்கிறாரே அந்த டாக்டர்...அவர் என்ன டாக்டர்?"

" I (eye) டாக்டர் தான் !"

"!!!"




தங்கமான டாக்டர் !

"பணத்துக்கு பதிலா அந்த டாக்டர் "தங்கமா" வாங்கிக்கிறாராமே ! அந்த டாக்டர் பேர் என்ன?"

"தங்க money !"


நடமாடும் டாக்டர் !



"நம்ம ஏரியாவுக்கு புதுசா வந்திருக்கிற லேடி டாக்டர், வீட்டுக்கு வந்து பிரசவம் பார்க்கிறாங்களாம் !"

"அப்படியா ! 'டோர் டெலிவரி' செய்யறாங்க-ன்னு சொல்லு !"

"!!!"


Saturday, May 19, 2018

'முந்திரி' அரசரும், ENT டாக்டரும் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 81


ENT டாக்டர் !

"பிள்ளைங்களோட பேரை மட்டும் தெரிஞ்சுகிட்ட அவங்க அப்பா    ENT டாக்டர்தான்-ன்னு எப்படி சொல்றீங்க?"

"இளஞ்செவி , மூக்கையன், தொண்டைமான் -ன்னு பேர் வெச்சிருக்காரே...! அத வெச்சுதான் !"

"???"





முந்திரி அரசர் !




"அவசரப்பட்டு மூக்கை நுழைத்து பேசுபவர்களைத்தானே 'முந்திரி' என்பார்கள். மிகவும் அமைதியான நமது மந்திரியாரை, நமது அரசர் ஏன் "முந்திரியார்" என்று சொன்னார்?"

"ஏதோ அவசரத்தில சொல்லிட்டாராம் !"

"!!!!"

ரிசார்ட்-டிலிருந்தே...!





"என்னங்க இது ! ரிசார்ட்-ல சேர்த்து வெச்ச அமைச்சரெல்லாம் சட்டசபைக்கு வந்து வாக்களிக்க மாட்டேன்னு சொல்றாங்களா? ஏன்?"

"அவங்களுக்கு அங்க தான் வசதியா இருக்காம்...வாக்கெடுப்பை அங்கேயே வெச்சுக்கலாம்-ன்னு போராட்டம் பண்றாங்க !"

"???"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates