Thursday, May 3, 2018
Monday, April 9, 2018
காவிரி பிரச்சனையில கருத்து சொல்லாத தலைவர் !
#கடி ஜோக்ஸ் - பாகம் - 80
காவிரி பிரச்சனையில கருத்து சொல்லாத தலைவர் !
"காவிரி பிரச்சனையிலே நம்ம தலைவர் எதுவுமே பேசாம இருப்பது தப்பு-ன்னு சொல்றீங்களே ! எல்லாத்துக்கும் கருத்து சொல்லனும்னு அவசியம் இல்லையே !"
"அட நீங்க வேற ! காவிரி-ன்னு ஒரு பொண்ணு, நம்ம தலைவரோட முதல் தாரம் தான்-னு சொல்லி வழக்கு போட்ட விவகாரத்த பத்தி சொன்னேன் !"
"????"
விரல் போச்சே !
"நம்ம ஹோட்டல்-ல சாம்பார் செய்யற அம்மா, காய் வெட்டும்போது விரலை வெட்டிகிட்டாங்களாம் !"
"ஐயயோ ! அப்புறம்...?!"
"அப்புறம் என்ன? இன்னைக்கு லேடீஸ் ஃபிங்கர் சாம்பார்-தானாம் !"
"!!!!"
வெஜ்-ஜா நான் வெஜ்ஜா?
"என்னங்க இது ! ப்யூர்-வெஜ் ஹோட்டல்-ன்னு சொல்லி கூட்டிவந்தா, உங்களுக்கு நான்-வெஜ்-ன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்றீங்க? எதை வெச்சு அப்படி சொல்றீங்க?"
"பக்கத்து டேபிள்-ல ஆமை வடையும், தவள வடையும் ஆர்டர் பண்றாரே !"
"????"
Labels:
jokes,
prasad,
tamil jokes,
நகைச்சுவை,
ஜோக்ஸ்
Monday, March 5, 2018
Saturday, February 10, 2018
தூக்கி எறியலாமா?!
#கடி ஜோக்ஸ் - பாகம் - 80
தூக்கி எறியலாமா?!
" ஏங்க ! தினம் ஆஃபிஸ் போயிட்டு வந்து பஸ் டிக்கெட் எல்லாம் தூக்கி போடாம...பத்திரமா அடுக்கி வைக்கிறீங்களே ! ஏன்?"
"விலை உயர்ந்த பொருள்களை தூக்கி எறியலாமா-ன்னு தான் !"
"???"
எலிசபத் கேட்ட கேள்வி
" M for MOUSE, R for RAT -ன்னு உங்க பையன் படிக்க ஆரம்பிச்சிருக்கானே ! எந்த ஸ்கூல்ல சேர்த்திருக்கீங்க?"
"எலி-மென்ட்டரி ஸ்கூல்-லதான் !"
"!!!"
செல்போன் திருடன்
"என்னங்க வாக்கிங் போனபோது செல்போனை புடுங்கிட்டு ஓடின திருடன், திரும்பி வந்து அத கொடுத்துட்டு என்ன சொல்லிட்டு போறான்?"
"அவன் ஐபோன் மட்டும்தான் திருடுவானாம். மத்ததெல்லாம் திருப்பி கொடுத்திடுவானாம் !"
"???"
Labels:
jokes,
prasad,
tamil jokes,
நகைச்சுவை,
ஜோக்ஸ்
Sunday, January 21, 2018
அரசியல்- பிரியாணி !
#கடி ஜோக்ஸ் - பாகம் - 79
BAR--க்குள்ளே நல்ல நடிகர் !
" அழகிகளுடன், நடிகர் BAR-ல் உல்லாசம்" ன்னு வாராவாரம் கிசுகிசு வருமே...அந்த நடிகர் அரசியல்ல குதிக்கப் போறாராம் !"
" பெண்மிக அரசியல் செய்வாருன்னு சொல்லுங்க !"
"!!!"
பிரியாணி ஷேர் !
"இலவசமா கிடைச்ச பிரியாணிய தான் மட்டும் தின்னாம, ரோட்டுல போறவங்கள எல்லாம் கரைஞ்சு கரைஞ்சு கூப்பிட்டு பகிர்ந்து சாப்பிடறாரே அந்த மனுஷன் !"
"அது காக்கா பிரியாணி ஆச்சே !"
விரல் போச்சே !
"வடை-ன்னா நம்ம வேதாசலத்துக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக இப்படி வடையை எடுக்கறேன்னு சொல்லி கையை நசுக்கிகிட்டு வந்து நிப்பாரா?"
"என்னது வடை எடுக்கப் போயி கையை நசுக்கிகிட்டாரா? அப்படி எங்கேயிருந்து எடுத்தாரு?"
"எலி பொறியிலேர்ந்து தான் !"

Tuesday, January 9, 2018
வீணையின் நாதம் !
இசைக்கருவி பலஉண்டு அதற்கெல்லாம் மகராணி...
வீணையெனும் வாத்தியமே ஏந்திடுவாள் கலைவாணி !
அசையாத மனம்கூட அசைத்திடுமே அதன்நாதம் !
இனியஒலி யாவைக்கும் அதன்ஒலியே உவமானம் !
கடலோர மண்ணுக்கு பாய்ந்துவரும் அலையோசை...
காதல்மதி கொண்டோர்க்கு கன்னியளின் வளையோசை...
மடல்பூக்கும் மலருக்கு தென்றல்தரும் முத்தஒலி...
நடமாடும் மயிலுக்கு மழைஇடியின் சத்தஒலி...
அன்பான அன்னைக்கு தன்பிள்ளை மொழிமழலை...
கவிபாடித் திரிவோர்க்கு செந்தமிழின் வார்த்தையலை...
ஒன்றாகச் சேர்ந்தோர்க்கு ஆனந்த சிரிப்பொலியாம்..
இறைதேடும் பக்தர்க்கு ஆலயத்தின் மணியொலியாம் !
இருக்கின்ற நிலைபொறுத்து கேட்கின்ற ஓசையது..
இனிதெனவே ஆகிடுமே...வீணையதன் நாதமென...
நறுக்கென்று எந்நாளும் நன்மொழியே பேசிடுவோம்..!
நாதமென அம்மொழிகள் ரீங்காரம் செய்திடுமே !

Sunday, December 31, 2017
Subscribe to:
Posts (Atom)