விவேகம் என்றால் புத்தி கூர்மையாம் !
விவேகம் என்றால் தெளிய பார்வையாம் !
விவேகம் என்றால் பகுத்து ஆய்வதாம் !
விவேகம் என்றால் மதியின் நுட்பமாம் !
விவேகம் என்றால் தலைக்கு மட்டுமா?
விவேகம் என்றால் மனதிற் கில்லையா?
மனதில் விவேகம் இருந்துவிடில்..
நடைமுறைக் கொத்த நினைவு வரும் !
நல்லதே செய்கிற எண்ணம் வரும் !
மதியும் மனமும் இணைவாக
சரியாய் இருந்தால்தானே விவேகமாம் !
தமிழ்மணம் வாக்களிக்க...
