Wednesday, July 15, 2020
மௌனம் கலைக்கும் நேரம்
தெய்வம் எல்லாம் இன்று... மௌனம் ஆனது ! தெய்வம் எல்லாம் இன்று மௌனம் ஆனது ! மனித குலம் அழிக்கும் கிருமி அதன் ஆட்டம்...அடக்காமலே... கண்டும் காணாது...கேட்டும் கேளாது... (தெய்வம் எல்லாம்) தோல் வண்ணம் பார்த்தேதான் நோய் தாக்குமா? ஆ...ஆ.... தோல் வண்ணம் பார்த்தேதான் நோய் தாக்குமா? - இந்த ஆள் வெள்ளை இவன் கருப்பன் எனபார்க்குமா? மாந்தர்க் குள்ளே பேதம் இல்லை பாடம் உண்டாச்சு... வேந்தன் என்ன வறியோன் என்ன ஒண்ணே கண்டாச்சு... பாடம் சொல்ல...வந்த வினையோ? இதை உணர்ந் தோமே..உள்ளம் தெளிந்தோமே தெய்வங்களே ! இன்னும் ஏன்மௌனம்? காக்க இது தருணம் ! (தெய்வம் எல்லாம்) சம்பந்தர் பதிகத்தில் பிணி தீர்ந்தது ... ஆ...ஆ.. சம்பந்தர் பதிகத்தில் பிணி தீர்ந்தது ... ஆதி சங்கரர் பாடலில் பொன் சேர்ந்தது ! அதுபோல் பாடி அருளைக் கேட்க யாருமில்லையோ ! கடவுள் எல்லாம் அடமாய் இருந்தால் அகிலமில்லையே ! போதும் கொடுமை..இல்லை பொறுமை.. பதில் சொல்வீரோ? அணைத்துக் கொள்வீரோ? தெய்வங்களே ! இன்னும் ஏன்மௌனம்? காக்க இது தருணம் ! (தெய்வம் எல்லாம்)
Labels:
பாடல்
Sunday, June 21, 2020
பதஞ்சலி முனியே நமஸ்காரம் !
"யோக சாஸ்திரம்" படைத்த பதஞ்சலி முனிவரின் வாழ்க்கை பற்றிய வரலாற்றுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிடைக்கப்பெறவில்லை. அவரது பங்களிப்பு, யோக சாஸ்திரம் தவிர ஆயுர்வேதத்திலும், நாட்டியக் கலையிலும் இருந்ததாகக் கருதப்படுகிறது, ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் மஹரிஷி பல அரிய சக்திகளைக் கொண்டிருந்ததாகவும், திருப்பட்டூரில் ஜீவ சமாதி கொண்டதாகவும் நம்பப்படுகிறது. அவருக்கு ஒரு பாமாலை :
பாடலாசிரியர்: ஸ்ரீதேவிபிரசாத்
ராகம்: சக்ரவாகம்
****************************
அவதார புருஷராய் அவனிக்கு வந்தார் !
சிவன், விஷ்ணு அருளோடு நலம்புரிய வந்தார் !
தவ ஞான மஹரிஷியாம் பதஞ்சலியாய் வந்தார் !
தேகநலன் பேணுகின்ற வழிகளதைத் தந்தார் !
கோரஸ்:
நாக உடல், நரனின் தலை கொண்ட விசேஷன் !
யோகக் கலை எழுத வந்த ஸ்ரீ ஆதிசேஷன் !
---
மனித உடல் அறிவியலை அறிந்திருந்த ஞானி !
புனிதர் அவர் வரலாறு அறியவில்லை பூமி !
ஆயுர்வேத மருந்தியலில் அவரே முன்னோடி !
காலம் அவர் மகிமையினைக் காட்டும் கண்ணாடி !
காலம் அவர் மகிமையினைக் காட்டும் கண்ணாடி !
கோரஸ்:
நாக உடல், நரனின் தலை கொண்ட விசேஷன் !
யோகக் கலை எழுத வந்த ஸ்ரீ ஆதிசேஷன் !
(அவதார)
ஆடல்கலை போற்ற வந்த நடராஜர் ரூபம் !
ஆசனங்கள் செய்யும் முறை அவரளித்த வேதம் !
திருப்பட்டூர் சன்னதியில் செய்திடுவார் தியானம் !
அவர்புகழை உலகறிய பாடிடுவோம் கானம் !
அவர்புகழை உலகறிய பாடிடுவோம் கானம் !
கோரஸ்:
நாக உடல், நரனின் தலை கொண்ட விசேஷன் !
யோகக் கலை எழுத வந்த ஸ்ரீ ஆதிசேஷன் !
(அவதார)
Thursday, May 7, 2020
வடிவேலு டெமோவுடன்...பொழுதுபோக்குக்காக வீடியோ..ஆனால் சொல்லுகின்ற வழிமுறைகளை சீரியசாக எடுத்துக் கொள்ளுங்கள் !...
#takecare #staysafe #covid19
Labels:
corona,
covid19,
precautions,
virus
Tuesday, May 5, 2020
LOCKDOWN SONG - ஊரடங்கு பாட்டு - வடிவேலு ஆட்டமுடன்...
Labels:
144,
lockdown,
lockdownsong,
song,
songs
Friday, April 24, 2020
கொரோனா கானா
அஜித் நடித்த "ஆனந்த பூங்காற்றே !" படத்தில் இடம்பெற்ற "மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி" என்ற பாடலின் மெட்டில் பாடலாம்...பாடுவதற்கான KARAOKE TRACK கொடுத்துள்ளேன் DOWNLOAD - செய்து கொள்ளலாம்.
பாடுபவர்கள், எனக்கு info@paattufactory.com - email-ல் share செய்யவும். #கொரோனாகானா #coronagana
********
Download Mp3
SMULE App-ல் பாட
தான நனா தான நனா தான நனா
தான நனா தான நனா தான நனா
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
Music
போவதிப்போ எங்கிட்டு?
Music
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
போவதிப்போ எங்கிட்டு?
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
புள்ளை குட்டிய கூட்டிட்டு
தயிரு, பாலு பாக்கெட்டு,
காயி, பழம் மார்க்கெட்டு
போவாதநீ கூட்டமெல்லாம் கூட்டிகிட்டு
ஆவாத நீ வாட்டமான டாரு கெட்டு !
போவாதநீ கூட்டமெல்லாம் கூட்டிகிட்டு
ஆவாத நீ வாட்டமான டாரு கெட்டு !
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
போவதிப்போ எங்கிட்டு?
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
போவதிப்போ எங்கிட்டு?
MUSIC
*****
மாஸ்க்க மாட்டு க்ளவுசை போட்டு
சொன்னத கேட்டுகிட்டு...
மாஸ காட்டு பூட்டிகிட்டு
வீட்டுல இருந்துட்டு...
Music
மாஸ்க்க மாட்டு க்ளவுசை போட்டு
சொன்னத கேட்டுகிட்டு...
மாஸ காட்டு பூட்டிகிட்டு
வீட்டுல இருந்துட்டு...
கைய கழுவி கிட்டு
பைய சாப்ட்டு புட்டு...
காலில்கால போட்டு
போனில் கால போட்டு
நாளு புல்லா பேசு...
சொந்தம் கிட்ட பேசு...
முடிஞ்சிதுனா ஹெல்ப்பு
பண்ணலாமே மாப்பு !
போவாதநீ கூட்டமெல்லாம் கூட்டிகிட்டு
ஆவாத நீ வாட்டமான டாரு கெட்டு !
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
போவதிப்போ எங்கிட்டு?
வெங்கிட்டு ! வெங்கிட்டு !
புள்ளை குட்டிய கூட்டிட்டு
தயிரு, பாலு பாக்கெட்டு,
காயி, பழம் மார்க்கெட்டு
போவாதநீ கூட்டமெல்லாம் கூட்டிகிட்டு
ஆவாத நீ வாட்டமான டாரு கெட்டு !
போவாதநீ கூட்டமெல்லாம் கூட்டிகிட்டு
ஆவாத நீ வாட்டமான டாரு கெட்டு !
#கானா பாடல்கள்

coronagana,
coronasong,
கொரோனாகானா,
கொரோனாபாடல்,
பாடல்
Wednesday, March 11, 2020
கொரனா..கொரனா..கொரனா..
#கடி ஜோக்ஸ் - பாகம் - 95
கொரைக்காத நாய்
"உங்க வீட்டு நாய்க்கு வைரஸ் காய்ச்சல்ன்னு நம்ம குமாரு சொன்னானே ! அப்படியா ?!"
"புதுசா வாங்கின நாய் கொரன்னாலும் கொரைக்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்...! அவன் கொரன்னா-வ மட்டும் காதுல வாங்கிகிட்டு கெளப்பிவிட்டுட்டான் போல...!"
"???"
துப்பட்டா
"பைக்ல போகுற பொண்ணுங்க எதுக்கு துப்பட்டாவால முகத்தை மூடிக்கிறாங்கன்னு நேத்து வரைக்கும் கிண்டல் பண்ணிகிட்டிருந்தாரே !"
"ஆமாம...நம்ம நல்லகண்ணு...அவருக்கு என்னாச்சு?"
"இப்போ அவரே முகத்துல துப்பட்டா கட்டிகிட்டுதான் வெளியில போறாராம் !"
முகமூடி
"ஏன் சார் பேங்கு-க்கு முகமூடி போட்டு வந்தவங்கள வாசல்லேயே தடுத்து நிறுத்தாம, உள்ளே விட்டீங்க ?"
"சார் ! கஸ்டமர்தான் மாஸ்க் போட்டு வர்றார்ன்னு நெனச்சிட்டேன் சார் !"

prasad,
tamil jokes,
கடி ஜோக்ஸ்,
நகைச்சுவை,
ஜோக்ஸ்
Thursday, January 16, 2020
கரும்பு-விரும்பு- எறும்பு
#கடி ஜோக்ஸ் - பாகம் - 94
கரும்பு-விரும்பு- எறும்பு
"கரும்பை வாங்கி வெச்ச உடனே எறும்பு வர்ற மாதிரி, எங்க அத்தையும் கரும்பை பார்த்தா 'டக்'ன்னு வந்து நிப்பாங்க !"
"இதுல என்ன ஆச்சர்யம் ! அவங்களும் 'ஆன்ட்-டி' தானே !"
சீரும் சிறப்பும்
"உங்க மாப்பிள்ளைக்கு பொங்கல் சீரு கொடுக்க மறந்துட்டேன்ன்னு சொன்னீங்களே !அவரு கோவிச்சுக்கலையா?"
"அவரு நடிகர் ஜீவா ரசிகர்ன்னு தெரிஞ்சதனால.. படம் வெளியாகிறப்ப சீறு படத்துக்கு டிக்கெட் வாங்கித்தர்ரேன்னு சொல்லி சமாளிச்சுட்டேனே."
மோப்ப நாய்
"நேத்து பக்கத்து தெருவுல ஒரு கொலை நடந்திருக்குன்னு சொன்னீங்களே ! அப்போ நைட் 9:30 மணி இருக்குமா?"
"ஏன் கேட்கறீங்க?"
"அப்போதான், எங்க வீட்டு நாய், "கொல கொல"ந்னு கொலச்சுது...!

Subscribe to:
Posts (Atom)