ஊற்று மன்றம் நடத்திய பொங்கல் கவிதைப் போட்டி-2016-க்கு நான் எழுதிய படைப்பு...உங்கள் பார்வைக்கு....வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...!
----------------------
வானம்பார்த்த பூமியில நாமவாழறோம் ! - அந்த
வருணனவன் பார்வையையே நம்பியிருக்கிறோம் !
யாகம்செஞ்சு படையல்வெச்சும் வேண்டிக்கிட்டோமே ! - பஞ்ச
கல்யாணிக்கு கல்யாணமும் செஞ்சுவெச்சோமே!
பரவலாக பொழியுமுன்னு நினைச்சிருந்தோமே ! - மழை
சிலமணியில் தொடர்ந்துவர தவிச்சுபுட்டோமே !
இரவலாக வாங்கியதை கொடுத்தமனுஷனே...- வந்து
இரக்கமின்றி பிடுங்கியதைப்போல் திகைச்சுபுட்டோமே !
வெள்ளமென கரையுடைத்து ஊரில்வந்ததே... !- மழை
நீருமட்டும் வந்திடல... அதையும்தொடர்ந்துதான்...
உள்ளம், நல்ல உள்ளங்களும் வாசல்வந்ததே ! - ஒரு
உதவிக்குநாம் இருக்கோமுன்னு சொல்லிவந்ததே !
சாதிஎன்ன? மதமுமென்ன? கேள்விகேட்கல - நம்ம
சோகத்துக்கு தோள்கொடுத்த முகமும்மறக்கல !
'சோதி'யென ஒளிருமந்த உதவும்மனசுதான் ! - இங்கே
இருண்டுபோன வாழ்க்கையில வெளிச்சம்காட்டுது !
நல்லஉள்ளம் இன்னும்பல இருப்பதைச்சொல்ல - பெரும்
வெள்ளம்வந்து ஊருக்கெல்லாம் உணர்த்தவேணுமா?
சொல்லிடுவோம் நன்றியினை அப்புனிதருக்கெல்லாம் ! - இங்கே
தெளிந்ததுவே மானுடத்தின் பெருமைநமக்கெல்லாம் !
வாழ்த்துக்கள் பரிசு பெற்றமைக்கு.
ReplyDeleteஅருமை...
ReplyDeleteவாழ்த்துகள்...
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
தங்களின் கவிதையை பார்வைக்கு பதிவேற்றம் செய்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லியமைக்காக நன்றி அண்ணா..கவிதை நன்றாக உள்ளது. அடுத்த போட்டிக்கு தயாராக இருங்கள்.வெற்றி பெறலாம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பா/கவிதை வரிகள்
ReplyDelete