.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, April 18, 2019

கோபக்கார தலைவர்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 90
 
டெலிவரி எங்கடா?

" உணவு டெலிவரி செய்யும் APP பண்ணி - அதில வர்ற ஆர்டர் எல்லாம், டெலிவரி பண்ணாம, தானே சாப்பிடறாராமே அந்த ஏகாம்பரம்!"

"அவரோட APP, "ஏகாம்பரம் ஈட்ஸ்" - தானே !


"???"




ஒய் கிவ் ய ஸ்லிப்?

"பூதம், பேய் எல்லாம், ஸ்லிப்-புல அவங்க பேர் இருந்தும் ஓட்டுரிமை இல்லையான்னு போராட்டம் பண்ணுதாமே !"

"அவங்க பேர்ல என்ன இருக்கு? "

"பூத் ஸ்லிப்...தான்..!"





கோபக்கார தலைவர்



"நம்ம தலைவருக்கு ஆனாலும் இத்தனை கோபம் ஆகாது..."

"அப்படி என்ன பண்ணினாரு?"

"ஓட்டு போட போனபோது வாக்கு இயந்திரத்தில எதிர்க்கட்சி சின்னத்தை பாத்த உடனே அவருக்கு  கோபம் வந்து 'கும்'-முனு அதுல ஒரு குத்து விட்டாராம் . வாக்கு பதிவாயிடுச்சு !"

Friday, February 8, 2019

தெறிக்கவிடும் தலைவா !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 89

வாட் டூ யு மீன்?



"புதுசா ஆரம்பிக்கிற கட்சிக்கு தலைவர் ஏன் "மீன்" சின்னம் தான் வேணும்-ன்னு அடம் பிடிக்கிறாரு...!"

"அவரு எப்போதும் தண்ணியிலேயே இருக்கிறத சிம்பாளிக்கா சொல்லத் தானாம் !"

"!!!!"



தெறிக்கவிடும் தலைவா !




"நம்ம தலைவர் மேடையில பேசும்போது எச்சில் தெறிக்குதாம்!"

"அதுக்காக...?"

"கூட்டத்தில "தலைவா !"ன்னு கோஷம் போடாம எல்லாரும் "சலைவா" (Saliva)-ன்னு சொல்றாங்க...!"

"????"




வடை போச்சே !




"பேஷண்ட்-டுக்கு போடற இன் ஜெக்ஷன் உடைஞ்சாலும், பேலன்ஸ்-ஆ இருந்த வடை வீணா போனாலும்
டாக்டர் என்ன சொல்வாரு?"

"தெரியலலையே !"

"ஊசி போச்சு...!"


Monday, January 14, 2019

பானை பொங்குது மேலே??



#கடி ஜோக்ஸ் - பாகம் - 88

"ரோடு போடற ஜல்லிய மாலையாய் கட்டி அந்த  மாட்டு கழுத்துல போட்டிருக்கே ஏன்?"

" ஜல்லிக்கட்டு-ங்கிறத அவரு தப்பா புரிஞ்சுகிட்டாரு !"

"???"
--------
" எல்லா வீட்டுலயும் பொங்க பானை மேலதான பொங்கி வரும். அது என்ன உங்க வீட்டுல கீழே பொங்கி வருதுன்னு சொல்றீங்க?"

" பானை அடியில ஓட்டையாச்சே !"

"!!!!"
---------

" அந்த கரும்பு விக்கிறவர்க்கிட்ட அப்படி என்ன சொன்ன? கோவிச்சுகிட்டாரு?!"

" கரும்பு தின்னனும்னு சொன்னேன். 30 ரூபாய் கொடுன்னாரு ! கரும்பு தின்ன கூலியான்னு கேட்டேன்..அதான்..!"




Tuesday, December 25, 2018

சித்தப்பா - ரஜினி ரசிகர் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 87

ரஜினி ரசிகர் !

"உங்க சித்தப்பா ரஜினி ரசிகர்-ன்னு சொல்ற சரி. அதுக்கும் அவர் 2வது கல்யாணம் பண்ணிகிட்டதுக்கும் என்னடா சம்பந்தம்?"

"எனக்கு கெடச்சது சித்தி டூ பாயிண்ட் ஓ -வாச்சே !"

"???"

----------------

"நம்ம தலைவரே தேர்தலில் நம்ம கட்சிக்கு பெரிய தோல்வி-ன்னு ஒத்துகிட்டாராமே !"

"ஆமாம் - உணர்ச்சிவசப்பட்டு, தோல்வி-ன்னாலும் சின்ன தோல்வி இல்லை எங்களுக்கு...அதுவும் பெரிசுதான்-ன்னு அறிக்கை விட்டாராம் !"

"!!!"

------------------












Saturday, November 10, 2018

சுட்ட கதை !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 86


திருடின கதை !

"டைரக்டர் சார் ! உங்க அடுத்த படம் 'திருடின கதை'-ன்னு பேசிக்கிறாங்களே ! அப்படியா !"

"அட நீங்க வேற ! அவங்க பேசிக்கிறது படத்தோட கதையை பத்தி இல்ல...! 'திருடின கதை'-ங்கிறது படத்தோட டைட்டில்...."

"???"



----------------------------------------------------------


ஒரே ஸ்பார்க்



"அடுத்த படத்துக்கான கதை யோசிக்கிறப்போ நம்ம டைரக்டர் தாமஸ்-க்கும், டைரக்டர்  தீனா-வுக்கும் ஒரே ஸ்பார்க் ஆச்சாமே !"

"அப்படி என்ன தோணிச்சாம்?"

"ரொம்ப யோசிக்காம, ஒரு கொரியன் படத்தை சுட்டுடலாமு-ன்னுதான் !"

"!!!"


----------------------------------------------------------

நாவலைத் தழுவி


"என்ன சார் இது ? உங்க நாவலைத் தழுவி படம் எடுக்கலாமுன்னு உங்ககிட்ட பர்மிஷன் கேட்க வந்தா நீங்க வேற ஒரு கதாசிரியரைக் கேட்க சொல்றீங்க !"

"நான் எழுதின நாவலோட கதையே அவர்கிட்ட சுட்டது தான் ! ஹி...ஹி..!

"!!!


Sunday, October 21, 2018

பிடித்த‌ பாடல் வரி

#கடி ஜோக்ஸ் - பாகம் - 85

மீ டு !


 
"நேத்து நம்ம தலைவர் பேரு "மீ டு"-வுல வந்துதுல...இன்னிக்கு...நம்ம தலைவர் "மீ டு"ன்னு சொல்லிருக்காரு !"

"அவரை யாரு harass பண்ணினாங்களாம்?"

"அவர் மேல புகார் வந்தது தெரிஞ்ச அவங்க சம்சாரம்-தான் !"

------------




பிடித்த‌ பாடல் வரி




"அவருக்கு புடிச்ச சினிமாப் பாடல் வரி எதுன்னு கேட்டே அவர் சிலை கடத்தல்ல தொடர்பு உள்ளவர்ன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க?"

"அவருக்கு புடிச்ச வரியா அவரு... "பென்சிலை சீவிடும் பெண் சிலையே !"-ன்னு சொன்னாரே !"

"????"

-------------------

இதுவல்லவோ பயிற்சி !


"உங்க பையன் இந்த வயசுலேயே நல்லா பேட்மிட்டன் விளையாடறானே ! ஏதாவது பயிற்சி எடுத்துக்கறானா?"

"ஆமாம்...வீட்டுல கொசு பேட் வெச்சு கொசு அடிக்கிறானே...!"




"???"

 




Saturday, September 15, 2018

சிங்காரம் விளையாடிய GAME

#கடி ஜோக்ஸ் - பாகம் - 84

 

விளையாட்டுக்காரன் !


 
"அந்த சிலை கடத்தல் சிங்காரம், கைதாகும் போது தன் பிள்ளைகளோட விளையாடிகிட்டிருந்தானாம் !"

"அப்படியா! என்ன விளையாட்டு?"

" STATUE GAME  -தான் !"

"!!!"
=========================================================


தூக்கப் போறேன்...கண்ணைக் கட்டி...!



"உன்னோட காதலன சிலை திருட்டு வழக்குல கைது செஞ்சுட்டாங்களாமே !"

"நீ சிலை மாதிரி இருக்கே ! உன்னை ஒருநாள் சிலையைத் தூக்கற மாதிரி தூக்கிட்டுப் போறேன் பாரு..ன்னு அடிக்கடி அவரு சொல்லும்போதே எனக்கு கொஞ்சம் டவுட்-டுதான் !"

"!!!"

======================================================

பல கேஸா?


நீதிபதி: சின்னையன் ! பல கடத்தல் கேஸ்கள்ல உங்களுக்கு பங்கு இருக்குன்னு சொல்றாங்களே ! நீங்க ஒத்துக்கறீங்களா?"

திருடன்: இல்லீங்கய்யா ! சில கடத்தல் தான்யா செஞ்சுருக்கேன் !"


Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates