தங்கல் பார்த்து வீட்ல பொங்கல் தான் !
"தஙகல் படம் பார்த்துட்டு வந்து தனக்கும் 'குஸ்தி' கத்துக்கணும்-னு பையன் கேட்டான்-னு சொல்லி இவ்வளவு சோகம் ஆயிட்டீங்களே..ஏன்?."
"அட நீங்க வேற... கேட்டது பையன் இல்ல...என் சம்சாரம்...! அதான்...!"
"!!!!"
புடிச்ச வரன்
"மனசுக்கு புடிச்ச வரன் அமையும்-ன்னு ஜோசியர் சொன்னது சரியாச்சு-மா?"'
"என்னடி சொல்லற? இன்னும் நாங்க பார்க்கவே ஆரம்பிக்கலையே !"
"நான் பக்கத்து வீட்டு 'ரகுவரனை'-க் காதலிக்கிறேனே...!"
"???"
அலங்கோலம் !
"மார்கழி மாசக் கோலப் போட்டியில நீ ஏன் GLOBE வரைஞ்சு வெச்ச?"
"பூ-கோலம்" -ன்னு தலைப்பு சொன்னதை, நான் "பூகோளம்"-ன்னு நினைச்சுகிட்டேன்...!"
"!!!"
அனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி வெங்கட் ஜி !
Deleteரசித்தேன்
ReplyDeleteநன்றி நண்பரே ! தொடரவும் !
Delete"பூ-கோலம்"-ன்னு
ReplyDelete"பூகோளம்"-ன்னு
புரிந்ததே
நகைச்சுவை தானே!