.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, June 15, 2010

விடுமுறை அனுபவம்

(காந்தீய கவிதை மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் [13-Jun-2010] ஆறுதல் பரிசு பெற்றது !)

வேலையில் விடுப்பு பெற்று முறையாய் திட்டமிட்டு
வேடிக்கை காண்பதற்கு வெளியூர் செல்வதுண்டு
காலையும் மாலையுமாய் ஊர்பெயர் பேசிபேசி
கடைசியாய் சொந்தஊர் செல்வதாய் தான்முடிவு !

மொட்டவிழ் மலர்களென்ன ! மலர்களின் வாசமென்ன !
மெல்லிய தென்றலென்ன ! தென்றலின் சுத்தமென்ன!
கட்டுடல் உழவரெல்லாம் ஏர்பூட்டும் காட்சியென்ன !
கானம் அதுபாடி நாற்று நடும் பெண்களென்ன !

கிளையிலே தூளியிட்டு குழந்தையை ஆட்டிவிட்டு
வேலயைத் தொடரும்அப் பெண்டிரின் பெருமையென்ன !
இலையிலே சோறுபோட்டு இயற்கையோ டியந்துவாழும்
இனியநல் வாழ்க்கைவேண்டி என்மனம் கேட்பதென்ன !

சொந்தஊர் விட்டுவிட்டு பட்டிணம் வந்து விட்டேன் !
சொர்க்கமாய் அந்தஊர் இப்போது தெரிகிறது !
எந்தஊர் போனாலும் விடுமுறைக் காலமென்றால்
சொந்தஊர் போல்வருமா ஆண்டாண்டு ஆனாலும் !

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates