ராகம்: தோடி
பல்லவி
காலனையும் கெலித்திடுவேன்...
காரணம் நான் உன்னடியான்...கணபதியே..கணபதியே.. (காலனையும்)
அனுபல்லவி
ஜாலம் செய்யும் அரக்கர்களை
காலடியில் கிடத்தியவா (ஜாலம்)
உன் துணையே துயர் நீக்கும்
இணையடிகள் பிடித்திட்டேன் (காலனையும்)
சரணம்
நீலகண்டன் சக்தியையும்
வலம்வந்து கனிபெற்றாய்..
வேழமுக ஆண்டவனே..
சேவற்கொடியான் மூத்தவனே...!
உன் புகழ் கானம் நான் பாடுவதால்..(காலனையும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment