பாடல் சூழல்: காதல் தந்த தேவதையை காதலன் வர்ணித்துப்பாடுதல்
ஆடும் மன ஊஞ்சலிலே யாரடி கிளியே ! _ விழி
தேடும் அந்த தேவதை யார் கூறடி கிளியே !
பூவுலக ரம்பையோ இல்லை பூவினத்தின் தங்கையோ!
பூத்திருக்கும் தும்பையோ? இல்லை பாத்திருக்கும் கெண்டையோ?
தேன் நிறைந்த பாத்திரமோ? தேவலோக சித்திரமோ?
(ஆடும் மன ஊஞ்சலிலே)
சுந்தரி போல் வந்து என்னை வதைத்தது என்ன?
நெஞ்சமதை சிதைத்தது என்ன?
நந்தவனத் தேரு போல நடந்தது என்ன?
சிந்தையதைத் தொடர்ந்தது என்ன?
விந்தைமொழி விழியிரண்டால் சொன்னனது என்ன?
என்னிதயம் நின்னது என்ன?
சந்தமுடன் பாட்டு வரக் காரணம் என்ன?
உள்ளுக்குள்ளே தோரணம் என்ன?
ஓவியமாய் வந்து என்னை வலைத்தது என்ன?
எந்தன் நிலை குலைத்தது என்ன? அவள் (பூவுலக ரம்பையோ)
இன்று வரை இப்படி நான் ஆனதுமில்லை !
புத்திமாறி போனதுமில்லை!
தென்றலைத்தான் தூது செல்ல அழைத்ததும் இல்லை!
பாட்டெடுத்து படித்ததுமில்லை!
என்றும் இந்த உணர்ச்சி கிட்ட எண்ணியதில்லை!
மனசுக்குள்ளே பட்டதுமில்லை!
வென்றுவிடும் காதலென நினைக்கவுமில்லை!
கனாக்கூட கண்டதுமில்லை!
திருப்பம் ஒன்று நடக்கும் என்று ஏற்கவுமில்லை!
மனம் எதிர் பார்க்கவுமில்லை அவள் (பூவுலக ரம்பையோ)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment