.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, January 16, 2020

கரும்பு-விரும்பு- எறும்பு

#கடி ஜோக்ஸ் - பாகம் - 94

கரும்பு-விரும்பு- எறும்பு

"கரும்பை வாங்கி வெச்ச உடனே எறும்பு வர்ற மாதிரி, எங்க அத்தையும் கரும்பை பார்த்தா 'டக்'ன்னு வந்து நிப்பாங்க !"

"இதுல என்ன ஆச்சர்யம் ! அவங்களும் 'ஆன்ட்-டி' தானே !"




சீரும் சிறப்பும்

"உங்க மாப்பிள்ளைக்கு பொங்கல் சீரு கொடுக்க மறந்துட்டேன்ன்னு சொன்னீங்களே !அவரு கோவிச்சுக்கலையா?"

"அவரு நடிகர் ஜீவா ரசிகர்ன்னு தெரிஞ்சதனால.. படம் வெளியாகிறப்ப சீறு படத்துக்கு டிக்கெட் வாங்கித்தர்ரேன்னு சொல்லி சமாளிச்சுட்டேனே."


மோப்ப நாய்

"நேத்து பக்கத்து தெருவுல ஒரு கொலை நடந்திருக்குன்னு சொன்னீங்களே ! அப்போ நைட் 9:30 மணி இருக்குமா?"

"ஏன் கேட்கறீங்க?"

"அப்போதான், எங்க வீட்டு நாய், "கொல கொல"ந்னு கொலச்சுது...!


Friday, December 6, 2019

ஆனியன் alias வெங்காயம்

நண்பர் ஒருவர் முகநூலில், "வெங்காயம்" என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார். அந்த முயற்சியை இங்கே பகிர்கிறேன் !


ஆனியன் alias வெங்காயம்

உணவகத்தில் சாப்பிடவே அவா ! - சென்று
      உட்கார்ந்து கேட்டேனே 'ஆனியன் ரவா !'
மன அகத்துள் எதிர்பார்ப்பு ! ஆசை ! - இதோ
     கொண்டு வந்து வைத்துவிட்டார் தோசை !

உண்ணுகின்ற வேளையிலே வாழ்வின் - ஒரு
     தத்துவத்தை உணர்ந்தேனே நானும் !
மண்ணுலக வாழ்க்கைஒரு "தேடலே" ! - இதோ
     தேடுகிறேன் 'ஆனியனை' தோசையிலே !

Wednesday, November 13, 2019

கடி ஜோக்ஸ் - பாகம் - 93

#கடி ஜோக்ஸ் - பாகம் - 93


"சார் ! உங்க பையன் பள்ளிக்கூடத்துக்கு எக்ஸாம் எழுத வரும்போது, நகத்திலேயே one word answer எல்லாம் எழுதிகிட்டு வர்றான் சார் !"

"அப்படியா ! விடையெல்லாம் FINGER TIPS-ல இருக்குன்னு இதத்தான் சொன்னானோ !"

"!!!"
_______________________________________




"ஒலிம்பிக்  போட்டியில துப்பாக்கி சுடுதல்ல (ஷூட்டிங்) பதக்கம் ஜெயிச்ச பொண்ணோட வாழ்க்கையை படமாக்கி அந்த டைரக்டர் ஜெயிச்சிட்டாரு ! நானும் அதை வெச்சே ஒரு படம் எடுக்கலாமுன்னு இருக்கேன்...என்ன பேர் வைக்கலாம்?"

"சுட்டபடம்...!"

"???"

********************************************************

தமிழாசிரியர்: ஐயா ! உங்கள் மகன்.. பள்ளி செல்லும் பிள்ளைக்கு இப்படியா முடி திருத்தம் செய்யவிடுவது?

அப்பா: அவன திருத்த முடியல சார் !

Saturday, August 17, 2019

தங்க்லீஷ் ஜோக்ஸ்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 92

1993-ம் ஆண்டு, அன்றைய நாளில்  பிரபலமாக இருந்த விவேகானந்தா கல்வி நிலையம் (Spoken English)  நடத்திய "தமிழ்-ஆங்கிலம் கலவை ஜோக்ஸ்" போட்டியில், மூன்றாவது பரிசு பெற்ற எனது ஜோக். மறைந்த திரு,க்ரேஸி மோகன் ஐயா அவர்கள் வெற்றி பெற்ற ஜோக்ஸை தேர்வு செய்த குழுவில் இருந்தவர் என்பது பெருமைக்குரியது... 





 தொடர்ந்து.... இன்றைய fresh jokes...

"இல்லாத No-Ball-ஐ நடுவர் நோ-பால் கொடுத்துட்டார்ன்னு அம்பயர் மேல வழக்கு போட்டதோட இல்லாம, அந்த பந்தை எடுத்து வந்து நீதிபதி மேசையில வேற வெச்சீங்களே ! எதுக்கு?"

" The ball is in your court-  ன்னு சொல்லத்தான்...!"

***************************************************


"இவனோட தாத்தா நல்லா சாப்பிடுவாராம் ! வீட்டுல அவர சாப்பாட்டு ராமன்னுதான் சொல்வாங்களாம் ! அதே போல இவனோட அப்பா..அவரும் நல்லா கட்டுவாரு...இவன் அப்படியே நல்ல வாரிசா வந்திருக்கான்...தின்ற விஷயத்தில..."

"Following their FOOD steps- ன்னு சொல்லுங்க...!"

****************************************************************

Saturday, May 18, 2019

ஜிம்-முன்னு சில ஜோக்ஸ்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 91


மாடல் ஆகுவேன் மம்மி !

"ஏன்டீ ! பேஷன் ஷோ மாடல் ஆகப் போறேன்னு சொல்லிகிட்டு இப்படி நொறுக்கு தீனியா தின்னுகிட்டு இருந்தா எப்படிதான் மாடல் ஆகமுடியும்?"

"முடியும் அம்மா ! ப்ள்ஸ் சைஸ் மாடல் ஆயிடுவேனே !"

"????"

ஜிம் பாடின்னா என்ன?


"ஏங்க தரகரே ! மாப்பிள்ளை பையனுக்கு 'ஜிம் பாடி' ந்னு சொன்னீங்க...பாத்தா அப்படி தெரியலையே !"

"108 கிலோ இருந்தவரு, இப்ப வெயிட் கொறச்சு 99 கிலோ ஆயிருக்காரே ! அதைச் சொன்னேன்!"

"!!!!"

ஷ்..அப்பா...வெயிட்டீஸ் !




"வெயிட் லிப்டிங் பண்ணிகிட்டு இருந்தப்போ, போன் வந்தவுடனே ஒரு கையை விட்டுட்டு டக்-குன்னு போன் எடுத்ததனால, கால்-ல அடிபட்டுகிட்டாரு நம்ம மதன் !"

"வெயிட் பண்ணி கால் எடுக்காததினால...கால்ல வெயிட் விழுந்திடுச்சுன்னு சொல்லுங்க !"

"???"


Thursday, April 18, 2019

கோபக்கார தலைவர்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 90
 
டெலிவரி எங்கடா?

" உணவு டெலிவரி செய்யும் APP பண்ணி - அதில வர்ற ஆர்டர் எல்லாம், டெலிவரி பண்ணாம, தானே சாப்பிடறாராமே அந்த ஏகாம்பரம்!"

"அவரோட APP, "ஏகாம்பரம் ஈட்ஸ்" - தானே !


"???"




ஒய் கிவ் ய ஸ்லிப்?

"பூதம், பேய் எல்லாம், ஸ்லிப்-புல அவங்க பேர் இருந்தும் ஓட்டுரிமை இல்லையான்னு போராட்டம் பண்ணுதாமே !"

"அவங்க பேர்ல என்ன இருக்கு? "

"பூத் ஸ்லிப்...தான்..!"





கோபக்கார தலைவர்



"நம்ம தலைவருக்கு ஆனாலும் இத்தனை கோபம் ஆகாது..."

"அப்படி என்ன பண்ணினாரு?"

"ஓட்டு போட போனபோது வாக்கு இயந்திரத்தில எதிர்க்கட்சி சின்னத்தை பாத்த உடனே அவருக்கு  கோபம் வந்து 'கும்'-முனு அதுல ஒரு குத்து விட்டாராம் . வாக்கு பதிவாயிடுச்சு !"

Friday, February 8, 2019

தெறிக்கவிடும் தலைவா !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 89

வாட் டூ யு மீன்?



"புதுசா ஆரம்பிக்கிற கட்சிக்கு தலைவர் ஏன் "மீன்" சின்னம் தான் வேணும்-ன்னு அடம் பிடிக்கிறாரு...!"

"அவரு எப்போதும் தண்ணியிலேயே இருக்கிறத சிம்பாளிக்கா சொல்லத் தானாம் !"

"!!!!"



தெறிக்கவிடும் தலைவா !




"நம்ம தலைவர் மேடையில பேசும்போது எச்சில் தெறிக்குதாம்!"

"அதுக்காக...?"

"கூட்டத்தில "தலைவா !"ன்னு கோஷம் போடாம எல்லாரும் "சலைவா" (Saliva)-ன்னு சொல்றாங்க...!"

"????"




வடை போச்சே !




"பேஷண்ட்-டுக்கு போடற இன் ஜெக்ஷன் உடைஞ்சாலும், பேலன்ஸ்-ஆ இருந்த வடை வீணா போனாலும்
டாக்டர் என்ன சொல்வாரு?"

"தெரியலலையே !"

"ஊசி போச்சு...!"


Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates