.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, November 15, 2013

நன்றி !

தீபாவளிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கீழ்காணும் என் கவிதைக்கு வாழ்த்துக்கள் தந்தோர்க்கு நன்றி சொல்ல நான்கு வரிகள் !


வெற்றி வாகைத் தந்தோர்க்கும்
போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன் !
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் !

Sunday, September 29, 2013

ஒளி காட்டும் வழி !


தீபங்கள் அணிசேர்க்கும் தீபாவளிப் பண்டிகை !
    தந்திடுமே நெஞ்சினிலே தெம்போடு நம்பிக்கை !
பாபங்கள், பிணி நீக்கும் நீராடும் நதிகங்கை !
   வாழ்த்துக்கள் பறிமாறி சேர்ந்திடும்ஓர்ஆயிரங்கை !


ஒளிர்கின்ற தீபங்கள் காண்பிக்கும் வழிஎன்ன?
    ஜொலிக்கின்ற புத்தாடை சொல்கின்ற குறிஎன்ன?
மிளிர்கின்ற மத்தாப்பு மொழிகின்ற மொழிஎன்ன?
    இனிக்கின்ற தித்திப்பு விளிக்கும் சங் கதிஎன்ன?



வருங்காலம் ஒளிமயந்தான் நமக்கிங்கு என்கிறது !
    மனஅழுக்கு ஆடையினைக் களைந்திடவும் சொல்கிறது !
ஒருபோதும் விலகாத இன்முகந்தான் பார்க்கிறது !
   இன்சொல்லே எப்போதும் சொல்லென்று கேட்கிறது !


ஒளிகாட்டும் வழிதன்னை ஒருசேரக் கண்டிடுவோம் !
    ஒற்றுமையின் வலிமையினால் தடையெதையும் வென்றிடுவோம் !
வழிகாட்டும் மூத்தவராய் நல்வழியில் சென்றிடுவோம் !
    வருங்கால சந்ததியின் உதாரணம் ஆகிடுவோம் !

Friday, August 23, 2013

வாலி !

வாளி வாளியாய் வார்த்தை கொட்டியது - நீ
பாடல் எழுதும் போது !
பாட்டு எழுதுதல் உனக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே !

கவியரசு காலத்திலேயே
புதுமுரசு கொட்டியவன் நீ !

அந்தக் கண்ண தாசனுக்கே
சின்ன பயம் தந்தவன் நீ !

பத்தாறு ஆண்டுதாண்டி
முத்தான பாடற் தந்தாய் !

எத்தனை நாள் ஆயிடினும்
முணுமுணுக்கும்  பாடற் தந்தாய் !

வாலிபக் கவிஞரென
மூத்தோரும் வாழ்த்திட்டார் ! - உன்

சீரிய நடைமுறையை
முன்மாதிரியாய் பார்த்திட்டார்!


சிந்தனைக்கும் ரசனைக்கும்
உன்பாடற் பெரும் விருந்து !

வந்தனைகள் செய்கின்றோம்
எம்மோடு மனமுவந்து !

Tuesday, August 20, 2013

தலைவா !

 நீ வரவேண்டும் ...உனைக் காண வேண்டும்...
என்பதுதான் பலபேரின் ஆசையிங்கு !

நீ வரும் நாளில் மாலையோடு
சிறப்பான பூசையுமுண்டு !

நீ வந்து கையசைத்தால்
மிரளுவார் பலரும்...!

நீ வரமாட்டாய் என்றுசொல்லி
மிரட்டுவார் சிலரும் !

நீ வரும் நேரம் யாரறிவார் ?
அறிந்தவ‌ ரில்லை !

உன் சக்தியினை சரிவரவே
புரிந்தவ‌ ரில்லை !

நீ வரும்போது புவிஅதிரும் !
விலகிடும் புதிரும் !

இறைவா ! என் தலைவா !
 உனைக் காண வேண்டும் !

வா ! வா ! நீ வா வா !  இங்கு
வணங்கினோம் மீண்டும் !

Monday, March 25, 2013

டௌரி கல்யாணம் !


வர வரவே தட்சணைதான் தம்பி - இங்கு
வழக்கமான பழக்கமாச்சு தம்பி ! - இது
தர தரத்தான் பெருகிடுது தம்பி ! - இது
தருபவரின் குற்றமன்றோ தம்பி !

'மளமள ' வென பெற்றோர்கள் தம்பி  ! - தம்
மக்கட்கு மணமுடிக்க எண்ணி !
'பலபல ' வாய் இன்னலுற்றே தம்பி ! - இங்கு
தட்சணைதான் கொடுத்திடுவார் அள்ளி !

'பளபள 'க்கும் பொன்னகைகள் கேளாய் தம்பி ! - நீ
கலகலக்கும் 'புன்னகை'தான் கேட்பாய் தம்பி !
'சிலசில'ராய் சேர்ந்திடுவீர் தம்பி ! - இந்த‌
சிறுசெயலை ஒழித்திடுவீர் தம்பி !

Thursday, May 26, 2011

பின் லேடன், லேடி

அப்போதா பாதிலே
அமெரிக்க படை போல‌
இப்போது என் நெஞ்சில்
எங்கிருந்து நீ புகுந்தாய் ?!
பின் லேடன் நானல்ல...
எனைக் கொல்லும் லேடி நீ !
பின்னாலே வருவேனே...ஓரக்
கண்ணாலே நீ பார்க்க...!

Thursday, December 30, 2010

குறை ஒன்றும் இல்லை...! ஐயப்பா...!

குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....
குறை ஒன்றும் இல்லை ...ஐயா....குறை ஒன்றும் இல்லை...ஐயப்பா...(குறை ஒன்றும்)

பதினெட்டு படிதாண்டி நிற்கின்றாய் ஐயா!
பதினெட்டு படி தாண்டி உனைக் காண் வருவோம்...
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....

ஹரிஹரனின் மைந்தனாம்...
கரிமுகத்தான் சோதரனாம்...
ஒளிமுகமாய் ஜோதியிலே...
வழிகாட்டும் ஐயனாம்....

மணிகண்டா...மலைவாசா...ஐயப்பா.! ஐயப்பா. !

மலைமீது குடி கொண்டாய் ஐயா...! ‍ ‍_ ஐயா....
மலைமீது குடி கொண்டாய் ஐயா....! _ எங்கள்
மனதோடு ஆலயம் கட்டினோம் வா...வா...! (மலைமீது)
எந்நாளும் எமை காக்க உனையின்றி யார் யார்...!
எந்நாளும் எமை காக்க உனையின்றி யார் யார்...!

ஸ்வாமியே சரணென்று சொன்னாலே போதும்...!
ஸ்வாமியே சரணென்று சொன்னாலே போதும்...!
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....
மணிகண்டா...மலைவாசா...ஐயப்பா.! ஐயப்பா. !

புவி ஆளும் ஐயன்...புலியின் மேல் வருவான்...
புளிப்பான வாழ்வையும் இனிப்பான தாக்குவான்...!
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....

பக்தர் பணிந்தேற்றும் ஐயப்பா...!

பக்தர் பணிந்தேற்றும் ஐயப்பா..உன் பாடல்
பாடும் பலமிருக்க பாடும் ஏதுண்டோ?
எம்மைக் காத்திட‌... நீயிருக்கும் பொழுது...
எம்மைக் காத்திட‌... நீயிருக்கும் பொழுது...
ஒன்றும் குறை இல்லை...எனை ஆளும் ஐயா....
ஒன்றும் குறை இல்லை...எனை ஆளும் ஐயா....

மணிகண்டா...மலைவாசா...ஐயப்பா.! ஐயப்பா. !
ஐயப்பா.! ஐயப்பா. ! ஐயப்பா.! ஐயப்பா. !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates