#கடி ஜோக்ஸ் - பாகம் - 86
திருடின கதை !
திருடின கதை !
"டைரக்டர் சார் ! உங்க அடுத்த படம் 'திருடின கதை'-ன்னு பேசிக்கிறாங்களே ! அப்படியா !"
"அட நீங்க வேற ! அவங்க பேசிக்கிறது படத்தோட கதையை பத்தி இல்ல...! 'திருடின கதை'-ங்கிறது படத்தோட டைட்டில்...."
----------------------------------------------------------
"அடுத்த படத்துக்கான கதை யோசிக்கிறப்போ நம்ம டைரக்டர் தாமஸ்-க்கும், டைரக்டர் தீனா-வுக்கும் ஒரே ஸ்பார்க் ஆச்சாமே !"
"அப்படி என்ன தோணிச்சாம்?"
"ரொம்ப யோசிக்காம, ஒரு கொரியன் படத்தை சுட்டுடலாமு-ன்னுதான் !"
"!!!"
----------------------------------------------------------
"என்ன சார் இது ? உங்க நாவலைத் தழுவி படம் எடுக்கலாமுன்னு உங்ககிட்ட பர்மிஷன் கேட்க வந்தா நீங்க வேற ஒரு கதாசிரியரைக் கேட்க சொல்றீங்க !"
"நான் எழுதின நாவலோட கதையே அவர்கிட்ட சுட்டது தான் ! ஹி...ஹி..!
"!!!